தூள் படத்தில் வந்த ஸ்வர்ணாக்காவ ஞாபகம் இருக்கா – கடைசி கால வாழ்க்கையில் இப்படி ஒரு பரிதாப நிலையா ?

0
1065
sorna
- Advertisement -

எப்பவுமே சினிமாவில் பிரபலமான ஹீரோ, ஹீரோயின் பெயர்களை வைத்து தான் அழைப்பார்கள். இது நடைமுறையில் ஒன்றான விஷயம். ஆனால், வில்லியின் பெயரை வைத்து கூப்பிடுவதும்,கிண்டல் செய்வதும் தற்போது பிரபலமாகி வருகிறது. ஆமாங்க,தூள் தமிழ் திரைப்படத்தின் வில்லி சொர்ணாக்கா.இவர் பெயரை பற்றி பேசாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மக்களிடையே பிரபலமானவர். இந்த தூள் சொர்னக்கா யாரு? அவங்க உண்மையான பெயர் என்ன? அவர் எங்கிருந்து வந்தார்? என பல கேள்விகள் சினிமாவாக பிரபலங்களிடையேயும்,பொதுமக்களிடையேயும் அதிகமாக பேசப்பட்டு வந்தார்.

-விளம்பரம்-

இவரின் உண்மையான பெயர் சகுந்தலா ஆகும்.இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார்.இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் 1951 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் திரைப்படங்களில் 1981ஆம் ஆண்டு தான் நடிக்க ஆரம்பித்தார்.அது மட்டும் இல்லைங்க மகாராஷ்டிராவில் மராட்டிய மொழிகளில் கூத்துப்பட்டறையில் நடித்து இருந்தார். பின்னர் தான் தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதற்காக தெலுங்கு மொழியை சீக்கிரமாகவே பேச கற்றுக்கொண்டார்.

- Advertisement -

இவர் தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நகைச்சுவையாகவும், வில்லி கதாபாத்திரத்திழும்,முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அது மட்டும் இல்லைங்க தெலுங்கில் 2003 ஆம் ஆண்டு வெளியான ‘ஒக்கடு’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவருக்கு சினிமா உலகில் பெயர், புகழ் வந்தது என்று கூட சொல்லலாம்.ஆனால், நம்ம சொர்ணாக்கா ஹைதராபாத்தில் உள்ள கொம்பள்ளி என்ற பகுதியில் தான் வசித்து வந்தார்.

2014 ஆம் ஆண்டு சனிக்கிழமை காலை திடீரென்று இவருக்கு நெஞ்சு அடைப்பு ஏற்பட்டதால் அநியாயமாக உயிரிழந்தார். மேலும் ,தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா வட்டாரமே சோகத்தில் ஆழ்ந்தது என்று கூட சொல்லலாம்.மேலும்,நடிகர் சகுந்தலா அவர்கள் தன்னுடைய 39 வயதில் ஆக்ஷன் காட்சிகள் கொண்ட தெலுங்கு படத்தில் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு இவருக்கு நகைச்சுவையை விட ஆக்ஷன் நடிப்பு சூப்பராக இருக்கு என்று கூறியதால் அடுத்தடுத்து வந்த பட வாய்ப்புகலில் வில்லியாக நடித்தார். அப்படி வந்தது தாங்க நம்ம ‘தூள்’ படம்.

-விளம்பரம்-

இவர் தமிழில் 2003ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளிவந்த ‘தூள் ‘ படத்தில் விக்ரம், ஜோதிகா, ரீமாசென், விவேக் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில்தான் நடிகர் சொர்ணா சகுந்தலா அவர்கள் அறிமுகமானார்.அவர் இந்த புகழ் ஒரு படத்தின் மூலம் தமிழில் பட்டையை கிளப்பினார் என்று கூட சொல்லலாம். அந்தளவிற்கு இந்த படத்தில் சகுந்தலா நடித்திருந்தார். இந்த படத்தில் ஒரு ஆண் வில்லன் எப்படி இருந்தால் இருக்குமோ! அந்த அளவுக்கு அதிகமாக நடித்திருந்தார்.

அதற்கு பிறகு தளபதி விஜய்யின் சிவகாசி படத்திலும், மச்சக்காளை என்ற ஒரு படத்திலும் சகுந்தலா நடித்திருந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு தன்னுடைய வீட்டிலேயே நெஞ்சு வலிக்குது என்று கூறினார். உடனே அவரை அவருடைய உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை அளித்தும் சிறிது நேரத்தில் பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகமே இவருடைய இறப்பிற்கு இரங்கலையும், அஞ்சலியையும் செலுத்தி வந்தார்கள். இவர் இந்த உலகை விட்டு மறைந்தாலும் சொர்ணாக்கா என்ற பெயர் என்றுமே மறையாது என்றும் கூறி வந்தார்கள்.

Advertisement