தூள் படத்தில் நடித்த சொர்ணாக்கா பரிதாபமாக முடிந்த வாழ்க்கை !

0
1690

தூள் படத்தில் தனது பெயரை கூட பிட் அடிக்கும் வில்லியாக, சொர்ணாக்கா கேரக்டரில் நடித்திருப்பார் தெரியுமா ஒரு நடிகை? அந்த நடிகையின் பெயர் என்ன தெரியுமா? அவர் எப்படி சினிமாவிற்குள் வந்தார் தெரியுமா?

sakunthala
சொர்ணா அக்காவின் உண்மையான பெயர் சங்குந்தலா. இவர் 1951ல் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தவர். அங்கு மராட்டிய மொழியில் கூத்துப்பட்டறையில் நடித்து வந்தவர், தெலுங்கு படங்களை பார்த்து சினிமா பிடித்துப்போக ஒரே வருடத்தில் தெலுங்கு மொழியை சரளமாக பேசக் கற்றுக்கொண்டார்.

இதன் மூலம் தனது 39 வயதில் ஒரு ஆக்சன் காட்சிகள் கொண்ட தெலுங்கு படங்களில் நடித்தார் சகுந்தலா. இதனால் இவரது இயல்பான ஆக்சன் நடிப்பு பிடித்துப் போக இவருக்கு அடுத்தடுத்து பல தெலுங்கு பட வாய்ப்புகள் வந்தது.

Dhool shornaka

கடந்த 2003ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த தூள் படத்தின் படத்தில் ‘சொர்ணா’ அக்கா என்ற கேரக்டரில் ஒரு ஆண் மகன் போல நடித்திருப்பார். இதன் மூலம் தமிழிலும் பிரபலம் ஆனார். அதன்பிறகு தளபதி விஜயின் சிவகாசி படத்திலும் மச்சக்காளை என்ற தமிழ் படத்திலும் நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 90 படங்கள் நடித்தார் சங்குந்தலா.

telangana-shakuntala

கடந்த 2014ஆம் ஆண்டு தன் வீட்டில் அதிகாலை 2.15 மணிக்கு மாரடைப்பு வந்து,அவசரமாக மருத்துவமனையில் சேர்த்தனர், ஆனால் சேர்த்த சிறிது நேரத்தில் இறந்து போனார் சகுந்தலா. இவரது இறப்பிற்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் அனைத்து பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தினர்.