தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் துருவ் விக்ரம். இவர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விக்ரமின் மகன் ஆவார். துருவ் அவர்கள் ஆதித்ய வர்மா என்ற படத்தில் தான் கதாநாயகனாக நடித்து இருந்தார். இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் கொடுத்த ‘அர்ஜுன் ரெட்டி; படத்தின் ரீமேக். இந்த படத்தில் பனிதா சந்து, ராஜா, அன்புதாசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் வெளிவந்து ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதுமட்டுமில்லாமல் துருவ் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான் என்ற திரைப்படத்தில் தனது தந்தை விக்ரமுடன் சேர்ந்து துருவ் நடித்து இருந்தார். தற்போது துருவ் அவர்கள் பைசன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி இருக்கிறார். ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை போன்ற படங்களை எல்லாம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்தது.
பைசன் படம்:
இதை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பைசன் படமும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரஜிதா விஜயன், பசுபதி, லால், அமீர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் இந்த மாதம் 17ஆம் தேதி திரையரங்கிற்கு வர இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

துருவ் விக்ரம் பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்திற்கான புரமோஷன் போது நடிகர் துருவ் தன்னுடைய தந்தை குறித்து கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், என் வாழ்க்கையில் இதுவரை நான் எந்த ஒரு விளையாட்டிலுமே கலந்து கொண்டதே கிடையாது. முதல் முறையாக நான் பைசன் படத்திற்க்காக தான் கபடி விளையாடினேன். படப்பிடிப்பில் கபடி விளையாட்டின் போது என்னுடைய கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதைப் பற்றி நான் என்னுடைய தந்தையிடம் சொன்னேன். உடனே அவர் ஆறுதல் சொல்லாமல் சந்தோஷப்பட்டார்.

விக்ரம் பற்றி சொன்னது:
சினிமாவில் இது சகஜம். இதை பழகிக்கொண்டால் முன்னேறலாம் என்றெல்லாம் சொன்னார். என்னுடைய தந்தையுடன் ஒப்பிட முடியாது தான். இருந்தாலும் அவரை நடிப்பு ரீதியாக தோற்றுவிக்க நான் தொடர்ந்து முயற்சிபேன். வாரிசு நடிகர் என்று எளிதில் எல்லோருமே விமர்சனம் செய்கிறார்கள். அது போன்ற விமர்சனங்களையும் முறியடிப்பதற்காகவே வழி நிறைந்த இந்த பயணத்தில் நான் தொடர்ந்து பயணிப்பேன். என்னை யார்? என்று அடையாளப்படுத்த தொடர்ந்து இது மாதிரியான படங்களில் நடித்து பெயர் எடுப்பது என்னுடைய லட்சியம் என்று கூறியிருக்கிறார்.






