மாரி செல்வராஜ்-துருவ் விக்ரம் படம் – அர்ஜுனா விருது வாங்கிய விளையாட்டு வீரரின் கதை தானா ?

0
1141
- Advertisement -

மாரி செல்வராஜ்- துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும் படம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018ல் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இந்த படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. இந்த படமும் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

இதனை அடுத்து சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தை பார்த்து முதல்வர் மு. க. ஸ்டாலின், ரஜினிகாந்த், கமலஹாசன், தனுஷ் உட்பட பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இப்படி இவர் இயக்கிய படங்கள் எல்லாம் அவர் பிறந்து வளர்ந்த பகுதிகளை மையமாக வைத்து தான் எடுத்திருக்கிறார்.

- Advertisement -

மாரி செல்வராஜ்-துருவ் கூட்டணி:

இந்நிலையில் மீண்டும் மாரி செல்வராஜ் அவர்கள் தான் பிறந்து வளர்ந்த ஊரை வைத்து படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக துருவ் விக்ரம் நடிக்கிறார். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை. மேலும், துருவ் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தினுடைய புதிய போஸ்டர் வெளியாக இருக்கிறது. இந்த படம் மணத்தி கணேசன் என்ற கபடி வீரரின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

மாரி செல்வராஜ் எடுக்கும் அடுத்த படம்:

தூத்துக்குடி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் கபடி விளையாடி இருந்தவர் தான் மணத்தி கணேசன். தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டத்திற்கும் திருச்செந்தூருக்கும் இடையே இருக்கும் ஒரு குக்கிராமம் தான் மணத்தி. இதில் ஒரு சாதாரண ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் கணேசன். அந்த காலத்திலேயே மணத்தியில் தொடக்கப்பள்ளி மட்டும் தான் இருந்தது. மேற்படிப்பு படிக்க வேண்டும் என்றால் மூன்றரை கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும் கணேசன் தன்னுடைய 8 வயதிலேயே கபடி விளையாட தொடங்கினார்.

-விளம்பரம்-

மணத்தி கணேசன் குறித்த தகவல்:

கபடி விளையாட்டின் மூலம் தன்னுடைய ஊருக்கு பெருமையை சேர்த்தார். ஆனால், இவரால் ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. அதற்கு பின் சாயர்புரம் பள்ளியில் சேர்ந்து மீண்டும் தன்னுடைய படிப்பை தொடங்கினார். அந்த பள்ளியில் கபடி இல்லாததால் ஹாக்கி விளையாட்டை விளையாட இருந்தார். ஹாக்கி விளையாட்டில் முதலில் கோல் கீப்பராக இவர் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல பரிசுகளை வென்று இருக்கிறார். பின் ஹாக்கி விளையாட்டிற்கு நிறைய பணம் தேவைப்பட்டதால் அந்த விளையாட்டையும் பாதிலேயே கைவிட்டார். அதன் பிறகு பாதியிலேயே விட்ட தன்னுடைய கபடி விளையாட்டை ஒரு ஆசிரியரின் தூண்டுதல் மூலம் விளையாடத் தொடங்கினார் மணத்தி கணேசன்.

மணத்தி கணேசன் திறமை:

மேலும், தன்னுடைய விடாமுயற்சியாலும் ஆசிரியரின் தன்னம்பிக்கினாலும் போராடி திறமையாக விளையாடி வந்தார். கபடி விளையாட்டுகாக ஏராளமான பதக்கங்களும் பரிசுகளையும் வாங்கி இருக்கிறார். அதன் பிறகு மின்வாரியத்துறையில் விளையாட்டு பிரிவின் மூலமாக இவருக்கு அரசு வேலையும் கிடைத்தது. இருந்தாலும், இவர் தன்னுடைய கபடி விளையாட்டை கைவிடவில்லை. 10 ஆண்டுகள் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடி இருந்தார். இவர் அர்ஜுனா விருதெல்லாம் வாங்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தமிழகத்திலிருந்து இதுவரை எந்த வீரரும் கபடி விளையாட்டுக்காக அர்ஜுனா விருது வென்றதில்லை. இவருடைய உறவுக்காரரான மாரி செல்வராஜ் இவருடைய கதையை மையமாக வைத்து தான் தற்போது திரைப்படமாக எடுத்து வருகின்றார்.

Advertisement