பாலிவுட்க்கு ஒரு நியாயம் கோலிவுட்டுக்கு ஒரு நியாயமா ? விமர்சனத்திற்கு உள்ளான நயன்தாரா.

0
1058
- Advertisement -

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் அஜித் தான் பொது நிகழ்ச்சிகளிலும் தனது படத்தின் பிரமோஷன்களில் கலந்து கொள்வதை எப்போதும் நிறுத்திவிட்டார் தற்போது நடிகைகளில் நயன்தாரா அதே ரூட்டை பின்பற்றி வருகிறார். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகைகளில் டாப் இடத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் அதிக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளிலும் நயன்தாரா தான் முதல் இடம்.

-விளம்பரம்-

நடிகை நயன்தாரா டாப் ஹீரோக்களுடன் நடிப்பது மட்டுமல்லாமல் லீடு ரோல்களிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். மேலும், இவர் லீடு ரோலில் நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் தான். அஜித்தை போல நயன்தாரா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்சகளில் கலந்துகொள்வது இல்லை என்றாலும் விருது நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொள்வார். நடிகையாக மட்டுமல்லாமல் நயந்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து rowdy pictures என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

- Advertisement -

இந்த தயாரிப்பில் பல படங்களை தயாரித்து வருகிறார்கள். மேலும், லீட் ரோலில் தான் நடிக்கும் பெரும்பாலான படங்களை தனது சொந்த தயாரிப்பில் தான் வெளியிடுகிறார் நயன். அதனாலேயே தன் சொந்த தயாரிப்பில் வெளியாகும் தன்னுடைய படங்களுக்கு முட்டும் Promtionல் கட்டாயம் ஈடுபட்டு விடுவார். இதனால் ரசிகர்கள் பலர் தான் தயாரிக்கும் படங்களின் ப்ரோமஷனுக்கு மட்டும் கலந்து கொள்ளும் நயன் அடுத்தவவர்கள் தயாரிக்கும் படங்களின் ப்ரோமஷனில் ஏன் கலந்துகொள்வது இல்லை என்று விமர்சிக்க துவங்கினர்.

இப்படி ஒரு நிலையில் ஜெயம் ரவியின் ‘இறைவன்’ படம் குறித்து நயன்தாரா எந்த பதிவையும் போடாதது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. தற்போது ஜெயம் ரவி இறைவன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வரும் வியாழக்கிழமை அன்று வெளியாக இருக்கிறது. உதயநிதி நடித்த மனிதன் படத்தை இயக்கிய ஐ.அகமது இந்த படத்தை இயக்கியிருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படம் ஒரு சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

ஆனால், இந்த படம் குறித்து எந்த ஒரு பதிவையும் நயன்தாரா முத்தாராம் பக்கத்தில் பதிவிடவில்லை.இத்தனை ஆண்டுகள் நயன்தாரா எந்த ஒரு சமூக வலைதள பக்கத்திலும் இல்லாமல் தான் இருந்தார். ஆனால் சமீபத்தில் வெளியான ஜவான் திரைப்படத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கி இருந்தார் நயன்தாரா. இதனால் ஜவான் திரைப்படத்தின் அனைத்து மொழி ட்ரைலரிலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.

அதே போல தான் ஹீரோயினாக நடிக்கும் படங்களின் ப்ரோமோஷனை தவிர மற்ற எந்த பட ப்ரோமோஷன்களில் கலந்துகொள்ளாத நயன் ஜவான் படத்தின் வெற்றி விழாவில் வீடியோ மூலம் தனது வாழ்த்துக்களை கூறி இருந்தார். ஆனால் இறைவன் படத்தை பற்றி எந்த ஒரு பதிவையும் அவர் போடாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாலிவுட்டிற்கு ஒரு நியாயம் கூறிவிட்டிற்கு ஒரு நியாயமா என்று பலரும் கேள்வி எழுப்ப இருக்கிறார்கள்

Advertisement