மீண்டும் விக்ரம் மகன் செய்த விபத்து குறித்து பேசும் நெட்டிசன்கள் – என்ன காரணம் பாருங்க.

0
370
dhruv
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் தன்னுடைய திறமையால் திரை உலகில் தனெக்கென முத்திரையை பதித்தவர் நடிகர் விக்ரம். தனது கடின உழைப்பு மூலம் பல ஆண்டு காலமாக சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளிவந்த கடாரம் கொண்டான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கோப்ரா என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் விக்ரம் வித விதமான கெட்டப்புகளில் வருகிறார். இதனை தொடர்ந்து விக்ரம் அவர்கள் ஆர்எஸ் விமல் இயக்கத்தில் மகாவீர் கர்ணா, மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் ஆகிய பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து விக்ரம் தன் மகன் துருவ் உடன் இணைந்து படம் நடித்து இருக்கிறார். பொதுவாக சினிமா உலகில் தங்களுடைய வாரிசுகளை நடிக்க வைப்பது வழக்கம். அந்த வகையில் விக்ரமின் மகன் துருவ் ‘ஆதித்ய வர்மா’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் கொடுத்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக். முதல் படத்திலேயே துருவ் விக்ரம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து தற்போது மகான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் அப்பா-மகன் இருவருமே கதாநாயகர்களாக இணைந்து நடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

மகான் படம் பற்றிய தகவல்:

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இவர்களுடன் படத்தில் வாணிபோஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், தீபக் பரமேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும், இந்த படம் ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

மகான் படத்தின் ரிலீஸ் :

இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் படத்தின் ரிலீஸ்கான வேலைகள் சென்று கொண்டிருக்கும் நிலையில் துருவ்வின் சில வருடங்களுக்கு முன் நடந்த விபத்து விஷயத்தை சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் வைரலாகி வருகிறார்கள். சில வருடங்களுக்கு முன் துருவ் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் வீடு அருகே சென்ற போது கார் விபத்துக்குள்ளானது.

-விளம்பரம்-

துருவ் செய்த விபத்து:

இந்த விபத்தில் 3 ஆட்டோக்கள் மிக மோசமான நிலையில் சேதமடைந்தது. அதில் ஒருவர் படுகாயமடைந்தார். இதை எடுத்து காரில் இருந்தவர்கள் தப்பித்து ஓடிவிட்டார்கள். காயம் அடைந்தவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து துருவ் மற்றும் அவருடைய நண்பர்களை கைது செய்தனர். பின் இந்த விபத்தின் போது இவர்கள் மது போதையில் இருந்தார்கள் என்பது தெரியவந்தது. இதன் பின் இவர்கள் மூவரும் ஜாமீனில் வெளிவந்தனர். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

மகான் பட ரிலீஸின் போது பயனர் செய்த வேலை:

இந்த நிலையில் துருவ்வின் மகான் படம் ரிலீசாகும் சமயத்தில் படக்குழுவினர் மும்முரமாக படத்தின் வேளைகளில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் போது பயனர் ஒருவர் இந்த விபத்து குறித்து நினைவில் வைத்து கொண்டு துருவை கிண்டல் செய்து பதிவு போட்டு வருகிறார்கள். தற்போது துருவை கிண்டல் செய்து வரும் பதிவுகள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது துருவ்வை பிடிக்காதவர்கள் செய்த வேலை என்பது தெளிவாக தெரிகிறது. இதற்கு துருவ் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement