‘எல்லாம் அவளை மறக்த்தான்’ – ஆதித்யா கரிகாலன் வசனத்தை மேடையில் பேசி அசத்திய துருவ். வீடியோ இதோ.

0
236
dhuruv
- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் பேசிய டயலாக்கை அப்படியே துருவ் பேசியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் 70 ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த கதையை பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக பொன்னியின் இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், நிழல்கள் ரவி, லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் படம் கடந்த மாதம் இறுதியில் தான் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது.

படத்தின் வசூல்:

மேலும், தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி வருகின்றனர். படம் வெளியாகி ரசிகர்கள் முதல் பிரபலங்கள் படம் என அனைவரும் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. அதோடு படம் வெளியாகி 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்திருக்கிறது. இனிவரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் பேசிய டயலாக்கை துருவ் பேசியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

துருவ் பேசிய வசனம்:

இந்த படத்தில் ஆதித்ய கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருப்பார். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும், இவர் படத்தில் நந்தினியை நினைத்து பேசும் வசனம் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே கவர்ந்தது என்று சொல்லலாம். இந்த நிலையில் இந்த வசனத்தை விக்ரமுடைய மகன் துருவ் மேடை ஒன்றில் பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

துருவ் திரைப்பயணம்:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக துருவ் திகழ்கிறார். இவர் ‘ஆதித்ய வர்மா’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் கொடுத்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக். இதனை தொடர்ந்து துருவ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் மகான். இந்த படத்தில் விக்ரமும் நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கிறார். இதனை அடுத்து சில படங்களில் துருவ் கமிட்டாகி நடித்து வருகிறார்.

Advertisement