‘நீ பாவம்தான் பண்ணனும்,அப்பத்தான்டா எங்கவாளுக்கு பூவா’ சர்ச்சை வீடியோவை லைக் செய்தாரா சூர்யா.

0
602
surya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சூர்யா அவர்கள் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார்.இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் செம மாஸ் கமர்சியல் படமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் மட்டுமன்றி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதோடு இரண்டு வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று இருந்தது.

- Advertisement -

சூர்யா 42 :

தற்போது சூர்யா 42 என்று பெயர் இல்லாத படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 3டி தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகி 10 மொழிகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் பாலிவுட்டில் நடிகர் திஷா பதானி மற்றும் “சீதா ராமம்” படத்தின் மிருணால் தாக்கூர் போன்றவர்கள் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் தான் நடிகர் சூர்யாவை பற்றி ஒரு சர்ச்சை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பிலிப் பிலிப் குருபாய் ட்விட்டர் பதிவு :

பிலிப் பிலிப் புகழ் குருபாய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சூர்யா லைக் செய்திருக்கும் பதிவை பகிருத்துளார். அந்த பதிவில் முதியவர் ஒருவர் ” தான் தூத்துக்குடிக்கு சென்றிருந்த போது தன்னை பார்க்க ஒரு நாடார் பையன் வந்ததாகவும், அவர் தான் அடுத்த ஜென்மத்தில் பிராமினராக பிறக்க வேண்டும் என்றும் குரியதாகவும் அதற்கு தான் வேண்டாம் நீங்கள் நாடாராகவே இருங்கள். பிராமணர் என்றால் பல கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி உங்களுடைய பாவங்கள் போக பிராமணருக்கு பணமளித்து வாழ்த்தினால் தீர்ந்துவிடும் என ஒரு கதையா குறிக்கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

சூர்யா லைக் செய்தாரா? :

அப்படி அந்த முதியவர் பேசிய விடியோவை பிலிப் பிலிப் புகழ் குருபாய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து “நீ பாவம்தான் பண்ணவேண்டும் அப்போதுதான் எங்களுக்கு பூவா” என்று கிண்டல் செய்து ஒரு பதிவை இட்டிருந்தார். அதோடு அந்த பதிவை நடிகை சூர்யா லைக் செய்ததாகவும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார் குருபாய். இந்நிலையில் இந்த பதிவு வைரலாகவே சர்ச்சையானது வெடிக்க தொடங்கியது.

பொய்யான தகவல் :

இந்த பதிவை பகிர்ந்த நெட்டிசன்கள் சிலர் நடிகர் சூர்யா தெரியாமல் லைக் செய்திருப்பார் என்று கூறுகின்றனர். மேலும் சிலர் கடுமையான விமர்சங்களை சூர்யாவின் மீது வைத்தனர். இப்படி பல விதமான விமர்சனத்திற்குள்ளாகியது அந்த பதிவு. ஆனால் நடிகர் சூர்யாவின் ட்விட்டர் பக்கதில் பார்க்கையில் அவர் அந்த விடியோவை லைக் செய்யவில்லை அப்படியிருக்க இந்த பொய்யான தகவலை பரப்பியவர்கள் மீது சூர்யா ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

Advertisement