தமிழ் சினிமா திரை உலகில் அடுத்த சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தளபதி விஜய் அவர்கள். மேலும்,நடிகர் விஜயின் ஒவ்வொரு படமும் திரையரங்கில் பட்டையை கிளப்பும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதிலும் தீபாவளியை முன்னிட்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த “பிகில்” படம் தியேட்டர்களில் மாஸ் காட்டிக் கொண்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் பிகில் படம் வெளியாகி நான்கு நாட்களிலேயே 200 கோடி ரூபாய் வசூலை அள்ளி தந்தது என்றும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தளபதி விஜய் மீது மத சார்பாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இது குறித்து பல விமர்சனங்களும், கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. விஜய் அவர்களின் உண்மையான பெயர் ஜோசப் விஜய். இவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் என்பது அனைவரும் தெரிந்தது தான்.

இந்நிலையில் நடிகர் விஜய் அவர்களின் பிகில் படம் படப்பிடிப்பு தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே படம் திரையரங்குக்கு வெளிவரும் வரை பல பிரச்சனைகளிலும், சர்ச்சைகளிலும் சிக்கி வந்தது. மேலும், இந்த பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் தளபதி விஜய் அவர்கள் காவி வேஷ்டி ஒன்றை கட்டிக்கொண்டு, கருப்பு நிற சட்டையை போட்டுக் கொண்டு, கழுத்தில் சிலுவை அணிந்து கொண்டு செம்ம மாஸாக இருந்தார். இதனை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கூச்சலிடும், கத்தியும் ஆர்ப்பாட்டம் செய்து வந்தார்கள். அதுமட்டுமில்லாமல் விஜய் அவர்களின் பஸ்ட் லுக்கிலேயே காவி வேஷ்டி கட்டியம், கறி வெட்டும் கட்டையின் மேல் கால் வைத்து இருப்பதை பார்த்து பெரிய கலவரங்கள் செய்தார்கள் கூட சொல்லலாம்.

இதையும் பாருங்க : மேலாடை அணியாமல் கையை மட்டும் வைத்து மூடி ஸ்ரீரெட்டி கொடுத்த போஸ்.

Advertisement

மேலும், சிலர் பேர் இதற்காக விளம்பரங்களையும் தேடினார்கள். இதனை தொடர்ந்து விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் காவி வேஷ்டியை மெர்சல் படம் வெளியான பிறகு கூரியர் செய்தது ஒரு தரப்பு. மேலும்,அதனால் தான் விஜய் அவர்கள் பிகில் படத்தில் ‘ராயப்பன்’ என்ற கதாபாத்திரத்தில் காவி வேஷ்டி, சிலுவை அணிந்து நடித்து உள்ளார் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இது ஒரு பக்கம் இருந்தாலும் விஜய் அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்காக மதமாற்றம் பிரசாரம் செய்கிறார் என்ற தகவல் வந்தவுடன் விஜய் மீது பல கருத்துக்கள் பதிவு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் ஒரு வீடியோவை சமூக வலைத் தளங்களில் வெளியிட்டு இனியாவது விழிப்புடன் இருங்கள், தீர விசாரியுங்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

மேலும்,நடிகர் விஜய் அவர்கள் மதமாற்றம் செய்வது போன்ற வீடியோ உண்மை அல்ல. அது விஜய்யின் ஜில்லா படம் நேரத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் சிறப்பு விருந்தினராக விஜயை அவர்கள் அழைத்து இருந்தார்கள். அப்போ இந்த வீடியோவை ஒரு சில பேர் தவறாக பரப்பி உள்ளார்கள் என்ற தகவல் என்று தெளிவான விளக்கத்தை விஜய் ரசிகர்கள் இணையத்தில் பதிவு செய்து வீடியோ ஆதாரத்தையும் வெளியிட்டிருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் நடிகர் விஜய் அவர்கள் மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர் அல்ல, மனிதர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார் என்றும் கூறி வருகின்றனர்.

Advertisement
Advertisement