கொரோனவினால் சென்னை வர முடியாமல் இருக்கிறாரா தல? இப்போ எங்க இருக்காரு?

0
38638
- Advertisement -

இந்தியாவில் கரோனா வைரஸை தடுக்க இந்திய பிரதம மோடி அவர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். உலக நாடுகள் அனைத்தும் இந்த கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வருகின்றனர். கொரோனா வைரஸின் பரவுதலை தடுக்க உலக நாடுகளில் உள்ள ஒவ்வொரு அரசாங்கம், மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் என பலர் போராடி வருகின்றனர். இந்தியாவில் 639 பேருக்கு மேல் இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதன் பரவல் அதிகமாகி வருகிறது.

-விளம்பரம்-

தமிழகத்தில் இதுவரை 26 பேர் இந்த கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். இந்த கொரோனா வைரஸினால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள். ஒட்டுமொத்த உலகமும் இந்த கொரோனா வைரஸுக்கு எதிராக போராடி வருகின்றனர். இதனால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் தல அஜித் அவர்கள் கொரோனா வைரஸின் காரணமாக வலிமை படத்தின் படப்பிடிப்பு தளத்திலே உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் தல அஜித். இவரை தமிழக மக்கள் எல்லாரும் செல்லமாக தல என்று தான் அழைப்பார்கள். இந்நிலையில் கொரோனா வைரஸின் காரணமாக படப்பிடிப்புகள் எல்லாம் நிறுத்தப்பட்டுள்ளது.

தல அஜித் அவர்கள் வலிமை படத்தின் படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றிருந்தார். அங்கு அவர் படப்பிடிப்பில் இருக்கும் போதே இந்த கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. தற்போது அரசாங்கம் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளதால் அஜித் அவர்கள் ஹைதராபாத்தை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை உருவானது. அதனால் தல அஜித் அவர்கள் தற்போது ஐதராபாத்தில் தங்கி விட்டதாக பிரபலம் ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனை தீர்ந்த உடன் தான் அஜித் சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Image result for ajith corona

கடந்த ஆண்டு அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள்.

வலிமை படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார். அதோடு நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படத்திலும் பணியாற்றுகிறார்கள்.

Advertisement