பீஸ்ட் படத்தின் Bgm, Kgf நடிகர் யாஷ் படத்தில் இருந்து சுடப்பட்டதா. இதை நீங்களே கேட்டு முடிவ சொல்லுங்க

0
694
beast
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். அதுமட்டுமில்லாமல் இவருடைய படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கடைசியாக விஜயின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை ஜார்ஜியாவில் எடுக்கப்போவதாக கூட சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது.

இதையும் பாருங்க : கர்ப்பமாக இருப்பதை சீரியல் குழுவில் சொன்னதும் இதான் சொன்னாங்க – சஞ்சீவ் ஆல்யா வெளியிட்ட தகவல்.

- Advertisement -

இதனிடையே சென்னையில் ஒரு பிரம்மாண்டமான மால் செட் போட்டு படப்பிடிப்பு நடந்தது. ஆனால், கனமழை காரணமாக பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. மேலும், மீண்டும் சென்னை ஈசிஆர் பகுதியில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் பிஜிஎம் பிரபல நடிகரின் படத்தில் இருந்து சுட்டது என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அந்த வீடியோவில் பீஸ்ட் படத்தின் பிஜிஎம் கன்னட நடிகர் யாஷ் நடித்த படத்திலிருந்தது போலிருக்கிறது என்று ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டிருக்கிறார். பின் அவர் அனிருத்தை கிண்டல் செய்யும் விதமாக டீவ்ட் போட்டு இருக்கிறார். தற்போது இந்த ட்விட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

இதனை பார்த்த பலரும் எப்போதுமே காப்பி அடிக்கிற வேலைதானா? என்று அனிருத்தை கிண்டல் செய்தும், கலாய்த்தும் வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் உண்மையிலேயே இமான் மட்டும்தான் நேர்மையாக மியூசிக் போடுகிறாரா! என்றும் கேட்டிருக்கிறார்கள். தற்போது பீஸ்ட் படத்தின் பிஜிஎம் குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்து வருவதால் விஜய் ரசிகர்கள் மத்தியில் என்ன கலவரம் நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

கன்னட மொழியில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் யாஷ். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் இவர் நடித்த கே ஜி எஃப் படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாகமும் உருவாகி வருகிறது.

Advertisement