கர்ப்பமாக இருப்பதை சீரியல் குழுவில் சொன்னதும் இதான் சொன்னாங்க – சஞ்சீவ் ஆல்யா வெளியிட்ட தகவல்.

0
1040
alyamanasa
- Advertisement -

சின்னத்திரையில் மிகப்பிரபலமான தம்பதிகளாக திகழ்பவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. இந்த சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யாவும், சின்னையா கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தார்கள். அதோடு இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. மேலும், இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு தான் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. இவர்களுடைய குழந்தையின் பெயர் அய்லா. பின் குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் கலக்கிக் கொண்டு வருகிறார். அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் சமீபத்தில் தொடங்கிய கயல் சீரியலில் நடித்து வருகிறார். இதனிடையே இவர்கள் இருவருமே எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்கள்.

- Advertisement -

அடிக்கடி தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருவார்கள். இந்நிலையில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதை குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஆல்யா தற்போது இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறார். இந்த தகவலை சோசியல் மீடியாவில் சஞ்சீவ் தெரிவித்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் ஆல்யாவும் ஆம் என்று பதிலளித்திருந்தார். இந்நிலையில் சஞ்சீவ்– ஆலியா தம்பதிகள் தங்களுடைய யூடியூப் சேனலில் அய்லா அக்காவாகிட்டா என்று வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்கள்.

அதில் அவர்கள் கூறியது, சஞ்சீவ் சொல்லும்போது நான் 3 மாதம் கர்ப்பமாக இருந்தேன். தற்போது நான்கரை மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். ராஜா ராணி சீரியலில் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த நேரத்தில் இரண்டாவது குழந்தை எல்லாம் நாங்கள் திட்டமிடவில்லை. ஆனால், இந்த விஷயம் எங்களுக்கே ஷாக்கிங் சர்ப்ரைசாக தான் இருந்தது. இதைப்பற்றி ராஜா ராணி டீமிடம் சொல்லியிருந்தோம். அவர்கள் சேனல் தரப்பில் பேசிவிட்டு சீரியல் இருந்து ஆல்யாவை நீக்காமல் அதற்கேற்றாற்போல் கதையை மாற்றுவதாக உறுதியளித்திருக்கிறார்கள். இதை கேட்டபோது என்னுடைய கண்களில் கண்ணீர் வந்தது என்று ஆல்யா கூறியிருக்கிறார். இப்படி இவர்கள் கூறிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் சஞ்சீவ்– ஆல்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement