இரண்டாம் இடத்திற்காக சினேகனிற்கு பரிசு தொகை கொடுக்கப்பட்டதா ?

0
3410
snehan

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வாயிலாக தமிழக மக்கள் பலரின் உள்ளதை கவர்ந்தார் சினேகன். அவர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக வருவார் என்று அவரின் ரசிகர்கள் உறுதியாக இருந்தனர். ஆனால் இறுதியில் ஆரவ் தான் வெற்றி பெற்றார்.

snehanஇந்த நிலையில் அவர் வானொலில் ஒன்றில் உரையாடுகையில் பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெற்றிருந்தால் அந்த பணத்தை கொண்டு உண்மையில் ஒரு நூலகத்தை அவர் தன் தாய் தந்தை பெயரில் கட்டுவதாக இருந்தாராம். அதற்காக அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஒரு இடத்தை தன் சொந்த ஊரில் வாங்கி வைத்துள்ளாராம். ஆனால் இறுதியில் அவர் வெற்றி பெறவில்லை.

snehanஅதோடு அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து 100 நாட்கள் பயணித்ததே ஒரு மிகப்பெரிய வெற்றி தான் என்று அவர் கூறியுள்ளார். இரண்டாம் இடத்தை பிடித்ததற்காக ஏதேனும் பிரத்யேக பரிசு கிடைத்ததை என்ற கேள்விக்கும் அவர் விடை அளித்தார்.

snehanஅந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை இரண்டாம் இடத்திற்கு எந்த பரிசும் இல்லை. அதுகுறித்து அக்ரிமென்டில் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆகையால் தனக்கு எந்த பிரத்யேக பரிசும் தரவில்லை, அதை தான் எதிர்பார்க்கவும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.