முதல் மனைவியுடன் விவாகரத்து – காதலியை பிறந்தாரா பப்லோ. கிளம்பிய சந்தேகம். காரணம் இந்த வீடியோ தான்.

0
403
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகளாக மிக பிரபலமான நடிகராக இருப்பவர் பிரித்திவிராஜ். இவர் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். இவரை எல்லோரும் பப்லு என்று தான் அழைப்பார்கள். தற்போது இவருக்கு 56 வயதாகிறது. கோலிவுட் ஜாம்பவானாக திகழ்ந்த எம் ஜி ஆர், சிவாஜி கணேசன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பிரிதிவிராஜ்.

-விளம்பரம்-
babloo

மேலும், இவர் சினிமா உலகிற்கு வந்து நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கிறது. அதோடு இவர் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். பின் இவர் சின்னத்திரையில் மர்மதேசம், அரசி, வாணி ராணி போன்ற பல்வேறு தொடர்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

பிரித்திவிராஜ் நடிக்கும் சீரியல்:

இவர் சின்னத்திரை தொடர்களில் வில்லனாகவும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று முடிவடைந்த கண்ணான கண்ணே தொடரில் கதாநாயகிக்கு அப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும், இவர் என்ன தான் படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் ரியல் லைப்பில் உண்மையான ஹீரோ தான். இவருக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் உள்ளார். இவருடைய மகனின் பெயர் அகத்.

babloo

இரண்டாம் திருமணம் :

இருந்தாலும், இவர் தன் மகனை குழந்தை போல் பார்த்து கொள்கிறார். பின் இவர் தன்னுடைய முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து இருக்கிறார்கள். இந்த சமயத்தில் தான் பப்லுக்கு மலேசியாவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு இருக்கிறது. முதலில் இந்த பெண் பப்லுக்கு தொழில் ரீதியாக தான் உதவியாளராக இருந்தார். பின் கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியானது.

-விளம்பரம்-

பிரிதிவிராஜ்-ஷீத்தல் பிரிவு:

இவரின் பெயர் ஷீத்தல். இருவருக்கும் 30 வயது வித்தியாசம் இருக்கிறது. இருந்தாலும், இவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு செய்த ரீல்ஸ் வீடியோக்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பப்லு, எனக்கும் ஷீத்தலுக்கும் திருமணமாகவில்லை. நாங்கள் ரிலேஷன்ஷிப்பில் தான் இருந்தோம் என்று பேசி இருந்தார். இந்த நிலையில் சீத்தல் மற்றும் பிரிதிவிராஜ் இருவருமே தங்களுடைய சோசியல் மீடியாவில் தாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்டு புகைப்படங்களை டெலிட் செய்து இருக்கிறார்கள்.

ரசிகர்கள் கேள்வி:

அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் பிரித்திவிராஜ் தன்னுடைய பிறந்தநாளை தனியாக கொண்டாடி இருக்கிறார். இதை பார்த்த பலரும் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா? சண்டையா? என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். பின் ஷீத்தல் போட்ட பதிவை பார்த்து ரசிகர் ஒருவர், நீங்கள் பிரிந்து விட்டீர்களா? என்று கேட்டதற்கு சீத்தலை லைக்ஸ் கொடுத்து இருந்தார். இதன் மூலம் இவர்கள் இருவரும் பிரிந்து இருப்பது உண்மையில் தெள்ளத் தெளிவாக இருக்கிறது. ஆனால், ஏன் பிரிந்தார்கள்?என்று தான் தெரியவில்லை. இவர்கள் இருவரின் பிரிவு 90ஸ் கிட்ஸ்களுக்கு ஒரு சந்தோஷம் என்றே சொல்லலாம். மீண்டும் இவர்கள் சேர்வார்களா? இல்லையா? என்று ரசிகர்கள் குழப்பத்திலேயே கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

Advertisement