மறைந்த நடிகர் கலாபவன் மணி சிலையில் வடிந்த ரத்தம்.! மக்கள் பீதி.!

0
1858
Kalabavan-mani
- Advertisement -

தென்னிந்தியத் திரைப்பட நடிகனும் பாடகருமான கலாபவன் மணி. மலையாளத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினாலும்,தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத் திரைப்படங்களில் நாயகனாகவும், தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் குணச்சித்ர மற்றும் வில்லனாகவும் நடித்துள்ளார்.

Image result for kalabhavan mani statue blood

மேலும் இவர் தேசிய விருதையும், கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருதினையும் வென்றவர். தமிழில் 1991 இல் விஜயகாந்த நடிப்பில் கேப்டன் பிரபாகரன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்த இவர், பின்னர் மம்முட்டி நடித்த மறுமலர்ச்சி துவங்கி ஜெமினி, குத்து, சாரதி ஜே ஜே போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

2013 ஆண்டு இரண்டு வன அதிகரிகளை தாக்கப்பட்ட வழக்கில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் மலையாள சினிமாவில் இவர் நடிக்க தடை விதைக்கப்பட்டது. இறுதியாக கமல் நடித்த பாபநாசம் படத்தில் நடித்தார். பின்னர் 2016 ஆம் ஆண்டு கலாபவன் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு கலாபவன் மணி குடும்பத்தினரும் அவருடைய ரசிகர்களும் சேர்ந்து கலாபவன் மணிக்கு உருவ சிலை ஒன்றை அவரது சொந்த ஊரான சாலக்குடியில் வைத்தனர். இந்த சிலையில் இருந்து,  இரண்டு தினங்களுக்கு முன்பு, ரத்தம் வடிவதாக ஒரு தகவல் தீயாய் பரவியது.

-விளம்பரம்-

ஆனால், அந்த சிலையை ஆராய்ச்சி செய்த போது அந்த சிலையில் இரும்பு ராடு ஒன்று துருப்பிடித்தன் காரணமாக தற்போது அடிக்கும் வெயிலில் உள்ளிருக்கும் பைபர் வெப்பத்தால் உருகி துருவோடு சேர்ந்து வெளியே வரும்போது இரத்தக் கலரில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

Advertisement