தன் மனைவியை அவரது காதலருடன் அனுப்பி வைத்தாரா சந்திரபாபு ? – இத வச்சி தான் பாக்கியராஜ் அந்த படத்த எடுத்தாரா.

0
637
Chndrababu
- Advertisement -

சந்திரபாபுவின் திருமண வாழ்க்கை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் சந்திரபாபு. இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவர். இவர் புகழ்ப்பெற்ற நடிகர் மட்டுமல்லாமல் பாட்டு, இசை, ஓவியம், நடிகர் இயக்குனர், சிற்பம் என அனைத்திலும் திறமை கொண்ட அற்புதமான கலைஞனாக விளங்கி இருந்தவர். இவருடைய தந்தை ஒரு சுதந்திர போராட்ட தியாகி என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

அதிலும் இவருடைய குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு தான் இருக்கிறது. இவர் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தன அமராவதி என்ற படத்தின் மூலம் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமா துறையில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார்.

- Advertisement -

சந்திரபாபு திரைப்பயணம்:

மேலும், இவர் எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் அவர்களுக்கு நிகராக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருந்தவர். அதுமட்டுமில்லாமல் சில நேரங்களில் அவர்கள் இருவரையும் விட அதிக சம்பளம் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர் கவலை இல்லாத மனிதன், குமாரராஜா போன்ற சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். ஆனால், அந்த படங்கள் பெரிய அளவு வெற்றி பெறவில்லை. அதனால் இவர் மீண்டும் நகைச்சுவை பக்கமே திரும்பி விட்டார்.

சந்திரபாபு திருமணம்:

நகைச்சுவையில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகர் சந்திரபாபு அவர்கள் தன்னுடைய 47 வயதில் காலமாகி இருந்தார். இந்நிலையில் இவருடைய திருமண வாழ்க்கை குறித்த சுவாரசியமான தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதாவது, சந்திரபாபு அவர்கள் 1958 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணம் அன்று முதலிரவின் போதே தன்னுடைய மனைவிக்கு வேறு ஒரு காதலன் இருப்பதை சந்திரபாபு அறிந்துகொண்டார்.

-விளம்பரம்-

சந்திரபாபு மனைவி பிரிந்த காரணம்:

பின் சந்திரபாபு அவரை காதலனுடன் சேர்த்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த கதையை இன்ஸ்பயர் ஆகி அந்த ஏழு நாட்கள் திரைப்படத்தை பாக்கியராஜ் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அது உண்மை இல்லை. சந்திரபாபு அவருடைய மனைவியுடன் பெங்களூருக்கு தேன்நிலவு சென்றார். அவர்கள் இருவரும் ஆறு மாதங்கள் குடும்பம் நடத்தினார். ஆனால், தனது மனைவி மகிழ்ச்சியாக இல்லை என்பதை சந்திரபாபு புரிந்து கொண்டார். அவர் தன்னுடைய பழைய காதலனின் நினைவில் இருக்கிறார் என்பதை அறிந்த சந்திரபாபு அவருடைய காதலுடன் சேரட்டும் என்று அவரை விட்டு பிரிந்து விட்டார்.

சந்திரபாபு இறப்பு:

அதன் பின்னர் அவரது மனைவி அவரின் காதலரையே திருமணம் செய்துகொண்டார். மனைவியை பிரிந்தாலும் அவருக்கு பல உதவிகளை சந்திரபாபு செய்து வந்துள்ளார். இதுதான் உண்மையான தகவல். பின் சந்திரபாபுவுக்கு போதை பழக்கம் இருந்தது. படங்கள் பெரிய அளவுக்கு கை கொடுக்காததால் கடன் தொல்லைகள் ஏற்பட்டது. கோர்ட் அவருடைய வீட்டை ஜப்தி செய்தது. தன்னுடைய கனவு இல்லம் கை விட்டுப் போனதை அடுத்து அவர் நிலைகுலைந்து போனார். வறுமையும், போதையும் சந்திரபாபுவை வாட்டி எடுத்திருந்தது. இறுதியில் 1974ல் சந்திரபாபு இவ்வுலகத்தை விட்டு சென்று விட்டார்.

Advertisement