தர்ஷனை பொறம்போக்கு என்று கூறினாரா சேரன்.! இதை கொஞ்சம் உன்னிப்பாக கேளுங்கள்.!

0
12794
cheran
- Advertisement -

பிக் பாஸின் நேற்றய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்கில் யார் சிறந்த பர்பாமெர் யார் மோசமான பர்ப்பாமர் என்று முடிவு செய்தனர். இதில் சிறந்த போட்டியாளராக ஷெரின், தர்ஷன், மதுமிதா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், சுவாரஸ்யம் குறைவாக செய்தவர்கள் பெயரில் அபிராமியின் பெயரை தான் கவின் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

- Advertisement -

ஆனால், மதுமிதாவோ கவின் சொன்ன காரணத்தை ஏற்கவில்லை. இதனால் இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது தர்ஷன், கவினை வா போகலாம் என்று அந்த இடத்தில் இருந்து இழுத்து சென்று விட்டார். அப்போது அமைதியாக இருந்த மதுமிதா, அதன் பின்னர் கவினிடம் சத்தம் போட்ட மது, இந்த வீட்டில் பெண்கள் அடிமைப்படுத்தபடுகிறார்கள், ஆண்கள் ஆதிக்கம் செலுத்து கிறார்கள் என்றெல்லாம் கூறியிருந்தார்.

மதுமிதா கவின் மற்றும் தர்ஷனிடம் சண்டை போடுவதற்கு முன்பாக சேரனிடம் கார்டன் ஏரியாவில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது ‘நான் பேசிட்டு இருக்கும் போதே ஹே, நீ வா என்று சொல்றான்’ என்று மதுமிதா கூற அதற்கு சேரனோ ‘அவ அடுத்த பொறம்போக்கு’ என்று கூறுவது போல கேட்கிறது.

-விளம்பரம்-

உண்மையில் சேரன் தர்ஷனை பொறம்போக்கு என்று கூறினாரா. இல்லை வேறு எதாவது கூறினாரா என்பது தெளிவாக கேட்கவில்லை. இந்த காட்சியை நீங்கள் நேற்றய நிகழ்ச்சில் சரியாக 34 நிமிடம் 31 நொடிகளில் கேட்கலாம்.

Advertisement