சரவணன் வெளியேற்றபட்டதற்கு சேரன் காரணமா ? எழுந்த திடீர் சர்ச்சை.!

0
4159
Cheran
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று சரவணன் வெளியேற்றப்பட்டது தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் சரவணன் கல்லூரி காலத்தில் படிக்கும்போது பெண்களை பேருந்தில் உரசியுள்ளேன் என்று கூறி இருந்து கருத்து பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-
saavanan

இதனால் சரவணனை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க சொன்னர் பிக் பாஸ். நீங்கள் பெண்கள் குறித்து பேசிய விடயம் மிகவும் கண்டிக்கப்படுகிறது. எனவே, நீங்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனால் சரவணன் மன்னிப்பும் கோரி இருந்தார். இருப்பினும் இத்தனை நாட்கள் கழித்து அவரை வெளியேற்ற என்ன காரணம் என்று பலரும் பல்வேறு விதமான காரணங்களை கூறி வருகின்றனர்.

இதையும் பாருங்க : சரவணன் வெளியேறியதை அறிவித்த பிக் பாஸ்.! கதறி அழுத சாண்டி மற்றும் கவின்.! 

- Advertisement -

இந்த நிலையில் சரவணன் வெளியேறியதற்கு சேரன் தான் காரணம் என்று புதிய சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரவணன் மற்றும் சேரன் இருவருக்கும் நடந்த சண்டை நாம் அனைவரும் அறிந்ததே. இதனால் கடந்த சனிக்கிழமை இந்த பிரச்சனை குறித்து பேசிய கமல், சரவணன் செய்தது தவறு என்று அறிவுறுத்தினார். அதன் பின்னர் சரவணன், சேரனிடம் மன்னிப்பும் கேட்டார்.

இந்த நிலையில் சரவணன் நேற்று திடீரென்று வெளியேற்றப்பட்டுள்ளார். சரவணன் வெளியேற்றப்பட்டதற்கு சேரன் தான் காரணம் என்று ஒரு புதிய சர்ச்சை ஒன்றும் எழுந்துள்ளது. சேரன் தனக்கு திரைத்துறையில் இருக்கும் பலத்தை வைத்து பிக் பாசிற்க்கு நெருக்கடி கொடுத்து சரவணனை வெளியேற்ற செய்ததாக புதிய சர்ச்சைஎழுந்துள்ளது எழுந்துள்ளது.

-விளம்பரம்-

இதற்க்கு முக்கிய காரணமே மேலும், சரவணன் மன்னிப்பு கேட்டு பல நாள் ஆகிய நிலையில் தற்போது அவர் திடீரென்று வெளியேற்றபட காரணம் என்ன என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. எனவே, சேரனால் தான் சரவணன் வெளியேற்றபட்டார் என்று அரசல் புரசலாக ஒரு குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. இது எந்த அளவிற்க்கு உண்மை என்றும் தெரியவில்லை.

Advertisement