ஜெயம் ரவி மனைவியுடன் குடி போதையில் சண்டையிட்டாரா தனுஷ் ? – வைரலாகும் புகைப்படம். உண்மை என்ன ?

0
18470
dhanush
- Advertisement -

சினிமா துறையை பொருத்தவரை சர்ச்சைகளுக்கு எப்போதும் பஞ்சம் இருந்தது கிடையாது. அதேபோல சினிமா பிரபலங்கள் பார்ட்டி, பப்பு என்று செல்லும்போது அங்கு பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கமான ஒரு விஷயம்தான். குடித்துவிட்டு ரகளை செய்தது, வாகனம் ஓட்டியது என்று பல்வேறு பிரபலங்கள் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது இதுபோன்ற சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் நடிகர் தனுஷ். தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் இருக்கின்றன்ர் அதில் தனுஷம் ஒருவர்தான். இவரைப் போலவே மற்றொரு வாரிசு நடிகர் ஜெயம் ரவியும் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-
dhanush

நடிகர் தனுஷ் அடிக்கடி பார்ட்டியில் கலந்து கொள்வது வழக்கம், இது சம்பந்தமான புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பலமுறை வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் தனுஷ் ,நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி மேலும் திரிஷா ஆகிய நால்வரும் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருந்தது. அந்த புகைப்படத்தில் நடிகர் தனுஷும் ஜெயம் ரவியின் மனைவியும் ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருப்பது போல தோன்றுகிறது. மேலும், இன்னொரு படத்தில் ஜெயம்ரவி தன்னுடைய தலையில் கைவைத்து செல்கிறார். இந்த புகைப்படத்தை பார்க்கையில் இது ஏதோ ஷூட்டிங் ஸ்பாட் படம் போலவும் தெரியவில்லை.

இதையும் பாருங்க : கடற்கரையில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த, உன்னாலே உன்னாலே பட நடிகை.

- Advertisement -

எனவே, இந்த புகைப்படம் தனுஷ் மற்றும் ஜெயம் ரவி அவரது மனைவி மற்றும் திரிஷா ஆகியோர் ஏதோ பார்ட்டிக்கு சென்று விட்டு வரும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறப்படுகிறது. மேலும், தனுஷ் மற்றும் ஜெயம்ரவி மனைவிக்கு ஏதோ தகராறு ஏற்பட்டு விட்டது என்றும் அப்போது குடிபோதையில் தனுஷ் வாக்குவாதம் செய்ததாகவும் சமூகவலைதளத்தில் சில செய்திகள் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து பிரபல சினிமா விமர்சகர்கள் ஆன வலை பெச்சு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது. இதோ அந்த வீடியோ.

தனுஷ் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவது புதிதான விஷயம் ஒன்றும் கிடையாது ஏற்கனவே இயக்குனர் விஜய் மற்றும் அமலாபால் விவாகரத்திற்கு தனுஷ் தான் காரணம் என்று இயக்குனர் விஜய்யின் தந்தை கூறியிருந்தார் இதற்கு விளக்கம் அளித்த அமலாபால்,விவாகரத்து சர்ச்சை தேவையற்றது. மேலும், அது ஒரு தனிப்பட்ட விஷயம்.அதே போல தனது விவாகரத்துக்கு வேறு எந்த நபரும் பொறுப்பேற்கவில்லை என்றும், இந்த முடிவு தம்மால் மட்டும் முழுமையாக எடுக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார். மேலும் தனுஷை தனது நலம் விரும்பி என்றும் கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement