இன்னும் சில தினங்களில் காதலர் தினம் தொடங்க இருக்கும் வேளையில் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகனின் காதல் குறித்து வெளியாகியுள்ள செய்தி ரசிகர்களுக்கு பயங்கர சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கௌதம் கார்த்திக். இவர் வேற யாரும் இல்லைங்க, தமிழ் சினிமா உலகில் நவரச நாயகன் கார்த்திக்கின் மகனும், மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனும் ஆவார். நடிகர் கார்த்திக் நடிகை ராகினியை முதலில் திருமணம் செய்தார். பின் ராகினியின் சகோதரியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். கார்த்திக்கின் முதல் மனைவி ராகினியின் மகன் தான் கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நடிகர் கார்த்திக் அவர்கள் மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சிப்பாய், என்னமோ ஏதோ, வை ராஜா வை, இந்திரஜித், தேவராட்டம் போன்ற பல படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ஆனந்தம் விளையாடும் வீடு. இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக விமர்சனரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து கௌதம் கார்த்திக் அவர்கள் ஆயுத சத்தம், செல்லப்பிள்ளை, பத்து தல போன்ற படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
கார்த்திக்- மஞ்சிமா மோகன் காதல்:
இந்நிலையில் கௌதம் கார்த்திக்- மஞ்சிமா மோகன் கூடிய விரைவில் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் மஞ்சிமா மோகன். 1998 ஆம் ஆண்டு தான் இவர் சினிமா உலகிற்குள் நுழைந்தார். பின் 2016ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்து இருந்த அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்.
மஞ்சுமா மோகன் படங்கள்:
அதுமட்டும் இல்லாமல் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தேவராட்டம், பெற்றிருந்தது. மன்னன் என சில படங்களில் நடித்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது மஞ்சுமா மோகன் எப்.ஐ.ஆர். என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் கௌதம் நடிக்கிறார். மேனனின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மனு ஆனந்த் இயக்கி இருக்கிறார்.
கௌதம்- மஞ்சுமா காதல்:
இந்த நிலையில் கௌதம்- மஞ்சுமா காதல் குறித்த தகவல் வெளியானது. தேவராட்டம் படத்தில் கௌதம் நடித்து இருந்தார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் மஞ்சிமா மோகன். இவர்கள் இருவரும் தேவராட்டம் படப்பிடிப்பில் இருந்த போது ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பித்தனர். பின் இவர்கள் இருவரும் இரண்டு வருடங்களுக்கும் மேலாக ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டி விட்டதால் இந்த ஆண்டின் இறுதியில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .
கௌதம்- மஞ்சுமா திருமணம் பற்றிய தகவல்:
அதோடு வரும் மாதங்களில் அவர்கள் திருமணம் பற்றிய தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என கௌதம் – மஞ்சிமா மோகனுக்கு நெருக்கமானவர்கள் பிரபல நாளிதழுக்கு தெரிவித்திருக்கிறார்கள். அதுவும் காதலர் தினம் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் கௌதம் மற்றும் மஞ்சிமா மோகன் காதல் குறித்து வெளியாகியுள்ள செய்திகள் ரசிகர்களுக்கு டபுள் சர்ப்ரைசாக அமைந்துள்ளது. அதில் சிலர் ஏப்ரல் மாதமே அவர்களுடைய திருமணம் நடக்கும் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால், அதற்கு மஞ்சுமா மறுத்துள்ளார். இருந்தாலும், கௌதம் கார்த்திக் உடனான தனது உறவை அவர் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.