இந்தியன் 2 கைவிட பட்டதா? இது என்னடா நம்மவருக்கு வந்த சோதனை.!

0
962
Indian-2
- Advertisement -

சமீபத்தில் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் வெளியாக இருந்த ‘வர்மா’ திரைப்படம் எதிர்பார்த்தபடி வரவில்லை என்று e4 நிறுவனம் அந்த படத்தை கைவிட்டது. தற்போது ஆதித்யா வர்மா என்ற புதிய பெயரில் அந்த படத்தை புதிய இயக்குனரை வைத்து எடுக்கவுள்ளனர்.

-விளம்பரம்-

இதே போன்று கமல் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன் 2 திரைப்படம் பாதியில் கைவிடபட்டதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கு ஷங்கர் சொன்ன பட்ஜெட் கட்டுப்படி ஆகாததால் இந்த படத்தை தயாரித்து வந்த லைகா நிறுவனம் பாதியிலேயே இந்த படத்தை கைவிட்டுவிட்டனர் என்று தகவல் பரவி வந்தது.

- Advertisement -
indian-2

ஏற்கனவே கமல் நடித்த பல்ராம் நாயுடு திரைப்படம் பாதியிலேயே கைவிடபட்டதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். அதே போல இந்தியன் 2 படம் கமலின் கடைசி படம் என்று கூறப்படுவதால் இந்த படமும் தடைபட்டு போய்விட்டதே என்று கமல் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்து வந்தனர்.

ஆனால், இந்த தகவலை மறுத்துள்ளது லைக்கா நிறுவனம், இந்த படம் எதிர்பார்த்தபடி தயாராகி வருகிறது. தற்போது இந்த படத்தின் முக்கிய காட்சிகள் சென்னையில் நடைபெற இருக்கிறது. அதை தொடர்ந்து கோகுலும் ஸ்டுடியோவில் நடைபெற இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement