ஜாக்குலின் பெர்னாண்டஸைத் தொடர்ந்து சர்ச்சையில் ஸ்ரீதேவி மகள் போனி கபூரின் மகள் ஜான்வி – மோசடி மன்னனிடம் இருந்து இத்தனை லட்சம் பரிசுப்பொருள் பெற்றாரா ?

0
440
jhanvi
- Advertisement -

சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சுகேஷ் மற்றும் அவரின் காதலி ஜாக்குலின் பெர்னாண்டஸ் குறித்த சம்பவங்கள் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்திய அளவில் அரசியல் புரோக்கராக செயல்பட்டு வந்தவர் சுகேஷ் சந்திரசேகர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப்பின் இரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொடுப்பதற்காக 50 லட்சம் கோடி லஞ்சமாக பெற்றதாக சுகேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து 2019 ஆம் ஆண்டு அவரை திகார் ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவத்தை அடுத்து சுகேஷ் சட்டவிரோதமாக பல வழிகளில் பணம் பரிமாற்றம் செய்து இருப்பதாக தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சுகேஷ் மீது வலுவான பல வழக்குகள் விழுந்து இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இவர் அனைத்து அரசியல் கட்சியினருடன் நெருங்கிய தொடர்பை வைத்துக் கொண்டு அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தது தெரியவந்தது. அதோடு சுகேஷ் சந்திரசேகரன் உடன் சேர்ந்து பல்வேறு முறை கேடுகளில் ஈடுபட்டதாக அவருடைய காதலி ஜாக்கி பெர்னான்டஸ் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், போர்ட்டீஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சிவிந்தர் மோகன் சிங் என்பவரைச் சிறையிலிருந்து விடுவிக்க உதவுவதாகக் கூறி அவரின் மனைவியிடமிருந்து 200 கோடி பறித்ததாக கூறி சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு தற்போது டெல்லி திகார் ஜெயிலில் இருக்கிறார்.

- Advertisement -

700 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை :

இந்த வழக்கில் சுகேஷ் மற்றும் அவருடைய காதலியும், நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சார்பில் 700 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில் சிறுவயதிலிருந்தே ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு வேண்டப்பட்டவர் என்றும், சட்ட அமைச்சகத்தின் மிகவும் முக்கிய அதிகாரி என்றும் கூறி பலரிடம் கோடிக்கணக்கில் மிரட்டி பணம் பறித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், இந்த காரியத்தில் இவருக்கு உறுதுணையாக இருந்தவர் மும்பையை சேர்ந்த பிங்கி இரானி என்ற பெண்ணும் சுரேஷ் மனைவி லீனா என்று கூறப்படுகிறது.

அமலாக்கப்பிரிவு குற்றப் பத்திரிக்கை:

இவர்களையும் கடந்த ஆண்டு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிங்கி இரானி மீது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் துணை குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்துள்ளார்கள். அதில், பிங்கி இரானி தான் சுகேஷை பெரிய தொழிலதிபர் என்று பயங்கரமாக பில்டப் பண்ணி பாலிவுட் நடிகைகள் இடம் அறிமுகம் செய்திருக்கிறார். அதோடு சுகேஷ் பாலிவுட் பிரபலங்களுக்கு பல பரிசுப் பொருள்களை வாங்கி கொடுத்து அனுப்பி இருக்கிறார். அந்த வகையில் பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நூரா மட்டுமில்லாது பல பாலிவுட் நடிகைகளுக்கு பரிசு பொருட்கள் கொடுத்து தன் வலையில் சிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

சுகேஷ் வழக்கில் ஸ்ரீதேவி மகளுக்கு உள்ள தொடர்பு:

இந்நிலையில் சாரா அலிகான், ஜான்வி கபூர், பூமி பட்னேகர் ஆகியோர்களும் தொடர்பு கொண்டு பரிசுப்பொருள் கொடுப்பதாக கூறி தன் வசம் இழுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மூன்று நடிகைகள் இடமும் விசாரணை நடத்தியுள்ளது. இது தொடர்பாக மூன்று பேரும் அமலாக்கப்பிரிவுக்கு பதில் அளித்துள்ளார்கள். அவர்களுடைய பதிலும் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கூறியது, தன்னை பெங்களூரில் உள்ள சலூன் ஒன்றை திறந்து வைக்கும்படி லீனா என்ற பெண் கேட்டுக்கொண்டார். அதனால் திறந்து வைத்ததற்காக 18. 94 லட்சம் பெற்றதாகவும், ஆடம்பர கைப்பை ஒன்றை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சுகேஷ் 200 கோடி வைத்து செய்த செலவு:

மேலும், சுகேஷ் பெரிய தொழிலதிபர் என்று பிகினி மாடல் அழகிகளிடம் அறிமுகம் செய்ததோடு சுரேஷ் மூலம் படவாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறி அவர்களை திகார் சிறைக்கு அழைத்து சென்று சுரேஷிடம் அறிமுகம் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். பண மோசடி மன்னனாக திகழும் சந்திரசேகர் திகார் சிறையிலும் தனது பலத்தை காட்டி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு வேறு சிறைக்கு அதிகாரிகள் இடமாற்றம் செய்தனர். தற்போது சுகேஷ் மிரட்டி வாங்கிய 200 கோடியை எந்த வகையில் செலவு செய்தான் என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சில கோடி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் உட்பட சிலருக்கு செலவு செய்துள்ளதாக தெரிய வந்தது. மீதி எஞ்சிய பணம் யாரிடம் இருக்கிறது? என்று விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது.

Advertisement