பூர்ண கும்ப மரியாதையை அவமதித்தாரா கமல் – அர்ச்சர் அளித்த விளக்கம். வீடியோ இதோ.

0
832
- Advertisement -

காஞ்சிபுரம் தேரடி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட கமலுக்கு குமரிக்கோட்டம் முருகன் கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்ட போது அதை கமல் நிராகரித்ததாக வந்த செய்தியை தொடர்ந்து உண்மையில் அன்று என்ன நடந்தது என்பதை குமரிக்கோட்டம் முருகன் கோவில் அர்ச்சகர் ஒருவர் விளக்கமளித்துள்ள வீடீயோ ஒன்றை மக்கள் நீதி மய்யம் சார்பாக வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் வருகின்ற 2021-ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் தமிழகம் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்த தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம், ரஜினியின் புதிய கட்சி என தேர்தல் களம் காணவுள்ளனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் நடிகரும் மக்கள் நீதி மைய தலைவருமான நடிகர் கமலஹாசன் 2021 ஆம் ஆண்டு தேர்தலுக்கான பிரச்சாரத்தை கடந்த 3 தினங்களாக தொடர்ந்து வருகிறார். இதற்காக மதுரை, தேனி, விருதுநகர்,விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் பிரச்சாரத்திலும் கட்சி நிர்வாகிகளின் கூட்டத்திலும் பங்குபெற்று வந்தார் கமல். பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல் நேற்று திருவண்ணாமலையில் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும், செல்லும் இடமெல்லாம் தனக்கு மக்களின் ஆதரவு இருப்பாதகவும் கூறி இருந்தார்.

- Advertisement -

மேலும், பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசி வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் காஞ்சிபுரம் தேரடி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட கமலுக்கு குமரிக்கோட்டம் முருகன் கோவில் சார்பில் குருக்கள்கள் சிலர் பூரண கும்பத்தை அளித்ததாகவும் அதனை ஏற்க மறுத்த கமல் அவர்கள் அளித்த சால்வையை மட்டும் அணிந்து கொண்டதாக வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது.

இப்படி ஒரு நிலையில் கோவில் குருக்கள் ஒருவர் இந்த விவகாரம் குறித்து வீடியோவில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், கமலுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்ட போது அவர் அதற்கு உரிய மரியாதையை அவர் செலுத்தினார். பூரண கும்ப மரியாதை எந்த ஒரு கோவில் பிரசாதத்தையோ, பூரண கும்ப மரியாதையையோ அவர் அவமரியாதை செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement