மகளீர் மட்டும் நாகேஷ் நடித்த கதாபாத்திரத்தில் நடித்துள்ள கமல்.! வெளியான அறிய புகைப்படம்.!

0
5811
magleer-mattum

தமிழ் சினிமா துறை உலகில் வெளிவந்து பெரிய அளவில் வெற்றி பெற்ற “மகளிர் மட்டும்” படம் சிங்கீதம் சீனிவாசராவ் என்பவரால் இயக்கப்பட்டு 1994ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் படம் கமலஹாசன் தயாரிப்பில் ரேவதி, ரோகினி, ஊர்வசி, நாசர் ஆகியோர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இதில் நாசர் வில்லனாக நடித்துள்ளார். இந்த மகளிர் மட்டும் படத்தை ஆங்கில படத்திலிருந்து தான் ரீமேக் செய்யப்பட்டது ஆகும். இந்த உலகில் பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும்,பல கட்டுப்பாடுகளும், பெண்களுக்கான அடையாளம் வேண்டும் என்ற பல கருத்துக்களை தெரிவிப்பதாகவும். இந்த படத்தின் மூலம் ஆணாதிக்கம், பெண்ணடிமை என்ற கொள்கைகளை ஒழிக்கும் நோக்கத்தில் தான் வெளிவந்தது என்றும் கூறினார்கள். பாரதியார் கண்ட புதுமை பெண் உருவாக வேண்டும் என்ற நோக்கில் வந்தது என்ற சில கருத்துக்களும் வந்தன.

Image result for magalir mattum nagesh

பொது இடங்கள் மற்றும் வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு வரும் அவலங்களை குறித்து வந்த கதையாகும். இந்த படம் வெளிவந்து “வெற்றி விழா” கொண்டாடும் அளவிற்கு மக்களிடையே அதிக வரவேற்பு பெற்றது. ஆனால் படம் வெளிவருவதற்கு முன்னால் ஹீரோ இல்லாமல் அதாவது கதாநாயகன் இல்லாமல் எப்படி பெண்களை மட்டும் வைத்து வந்த படம் வெளியிட்டால் ஹிட்டாகுமா? இல்லையே? என்ற கவலையில் இயக்குனர்களும், படம் சார்ந்த மற்றவர்களும் கவலையில் முன்வரவில்லை.

- Advertisement -

ஆனால் உலக நாயகன் கமலஹாசன் அனைவரையும் எதிர்த்து நின்று இந்த படத்தை வெளியிட்டார். அதன் முயற்சி தான் பெரிய அளவில் வெற்றி கண்டது. தற்போது மகளிர் மட்டும் 2 வரும் அளவிற்கு வெற்றி பெற்றது. இது மட்டுமில்லாமல் அந்த படத்தில் நடித்த ஊர்வசியின் நடிப்பின் மூலம் மாநில அரசு அவருக்கு விருதும் வழங்கியது.மகளிர் மட்டும் படத்தை ‘ஆடவாள்ளக்கு மாத்ரமே’ என்று தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்டார்கள்.

இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யவும் முடிவெடுத்தார்கள்.இந்தியில் “லேடிஸ் ஒன்லி” என்ற பெயருடன் தினேஷ் சைலேந்திர இப்படத்தை இயக்கினார். கமலஹாசன் தயாரிப்பில் சீமா பிஸ்வாஸ், ஷில்பா ஷிரோத்கர், ஹீரா ஆகியோர் நடித்தனர். நாசர் கதாபாத்திரத்திற்கு பதிலாக ரந்தீர் கபூர் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் மகளிர் மட்டும் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நாகேஷ் பிணமாக நடித்திருந்தார். அது ஒரு பத்து, பதினைந்து நிமிடங்கள் வரைதான் காட்சிக்கு கொண்டுவரப்படும் நகை சுவை பகுதி. அந்த கடைசி காட்சியில் நாகேஷுக்கு பதில் நான் கமலஹாசன் நடித்திருந்தார். இது பெரியளவில் ஆச்சரியப்பட்டதக்க விஷயமாகும்.1997 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அந்த படம் வெளிவரவில்லை, என்ன காரணம்? என்று இதுவரை தெரியவில்லை.

-விளம்பரம்-

இதுகுறித்து பலமுறை கேட்டும் அவர்கள் பதில் அளிக்கவில்லை. தற்போது அந்தப் லேடிஸ் ஒன்லி படம் குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாக வைரலாக பரவிக் கொண்டு வருகின்றன.அந்த புகைப்படத்தில் கமல் ஹாசனுடன் 3 கதாநாயகிகளும் இருக்கும் புகைப்படம் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் காணப்பட்டது.இனிமேலாவது இணையங்களில் வந்த புகைப்படம் குறித்து கமலஹாசன் ஏதாவது ஒரு வலைத்தளங்களில் பதிலளிப்பார் என்று மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது. உலக நாயகனை அப்படி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு மக்கள் ஆர்வமாக உள்ளனர் என்றும் தகவல்கள் வெளிவந்தன.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement