சுத்தம், மாஸ்டர் படமும் OTT தான் ரிலீசா ? பிரபல செய்தித்தாளில் வெளியான தகவல் இதோ.

0
955
master
- Advertisement -

கொரோனா பிரச்சனை காரணமாக திரைப்படங்கள் அனைத்தும் Ott தளத்தில் வெளியாகி வருகிறது. ஆனால், பெரிய நடிகர்களின் படங்கள் கொரோனா பிரச்சனை முடிந்த பின்னர் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூர்யா தனது ‘சூரரை போற்று’ படத்தை Amazon OTT தளத்திற்கு விற்றுவிட்டார்.வரும் அக்டோபர் 30 ஆம் தேதி இந்த அமேசான் பிரைமில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

இதனால் தமிழ்த் திரையுலகினர் பலரும் ஆச்சரியமடைந்தனர். ஏனென்றால், தென்னிந்தியத் திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் பெரிய ஹீரோ படமாக ‘சூரரைப் போற்று’ அமைந்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சூர்யா,பல்துறை கலைஞர்களின் கற்பனை திறனிலும் கடுமையான உழைப்பிலும் உருவாகும் திரைப்படத்தைச் சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது தயாரிப்பாளரின் முக்கியக் கடமை” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில் மாஸ்டர் படமும் OTT தளத்தில் வெளியாக இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிழிதளில் செய்தி வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, மாஸ்டர் படம் கண்டிப்பாக OTT தளத்தில் வெளியாவது என்று தயாரிப்பாளர்கள் சிலர் நம்பிகை தெரிவித்து இருக்கின்றனர். மேலும், மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தெரிவித்த போது கூட ரசிகர்களுக்காக நடிகர் விஜய் மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் தான் வெளியிட ஆசைபடுகிறார் என்று கூறியிருந்தார்.

சமீபத்தில் மாஸ்டர் படமும் அமேசானில் வெளியாகுமா என்று ட்விட்டரில் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள Amazon நிறுவனம், இது தொடர்பாக நாங்கள் இன்னும் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. விரைவில் இது குறித்து செய்திகள் வரும் என்று கூறியுள்ளது. இப்படி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவராமலேயே மாஸ்டர் திரைப்படம் OTT யில் வெளியாக இருப்பதாக வந்த செய்தியால் ரசிகர்கள் குழம்பி உள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement