தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் "மெர்சலாயிட்டேன்" என்ற தலைப்பை தான் 2014-லேயே பதிவு செய்துள்ளதாகவும். அந்த படத்திற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். அதோடு "மெர்சல்" என்ற தலைப்பு தன் படுத்துடைய தலைப்போடு ஒத்துப்போவதால் அதற்கு தடை கூறி வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் அக்டோபர் 3-ஆம் தேதி வரை மெர்சல் என்ற தலைப்பில் படத்தை விளம்பரம் செய்யக்கூடாது என்றும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸை இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
இதன் காரணமாக ஒருவேளை மெர்சல் என்ற தலைப்பை விஜய் படத்திற்கு வைக்க முடியாத ஒரு சூழல் ஏற்படுமாயின், அந்த படத்தின் மெகா ஹிட் பாடலான "ஆளப்போறான் தமிழன்" என்ற பாடலின் முதல் வரியையே டைட்டீலாக்க வைத்துவிடலாம் என்று அந்த படக்குழுவினர் முடிவெடுத்துள்ளதாக ஒரு செய்தி கசிய தொடங்கியுள்ளது.சினிமாReading time · 1 min





