கொரோனா குறித்து அப்போதே சொன்னாரா எம் ஆர் ராதா ? ராதிகா பதிவிட்ட ஆடியோ பதிவு.

0
2317
mr
- Advertisement -

நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் கொரோனா தாக்கத்தினால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவினால் மக்களின் நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது. கொரோனாவை எதிர்த்து உலக நாடு முழுவதும் உள்ள அரசாங்கம், மருத்துவர்கள், காவல்துறை, நர்ஸுகள் என பல பேர் தங்கள் உயிரை பயணம் வைத்து போராடி வருகின்றனர். தற்போது தமிழ் நாட்டில் கொரோனாவினால்  2,526 பேர் பாதிக்கப்பட்டும், 28 பேர் பலியாகியும் உள்ளனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-37.jpg

இந்தியா முழுதும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டிருந்த நிலையில் நாளையுடன் (மே 3) ஊரடங்கு நிறைவடைவதாக இருந்தது. ஆனால் கொரோனாவின் தாக்கம் தொடர்வதால் மே 4 தேதியிலிருந்து மே 17ஆம் தேதி வரை, அதாவது, மேலும் இரண்டு வாரங்களுக்கு தேசிய அளவில் லாக் டவுன் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தால் நேற்று(மே ) வெளியிட்டது.

- Advertisement -

கொரோனா வைரஸ்சிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை, இதற்கு ஒரே வழி வீட்டில் பாதுகாப்பாக இருப்பதோடு அடிக்கடி கை கழுவதும், எப்போதும் முகக்கவசம் அணிந்திருப்பது தான். இருப்பினும் கொரோனா குறித்து பல்வேறு வதந்திகள் மக்கள் மத்தியில் பரவி வருகிறது. இந்த நிலையில் பிரபல நடிகையான ராதிகா சரத்குமார் வீடியோ பகிர்ந்துள்ளார்.

அந்த வீடீயோவில் தனது தந்தையும் பிரபல நடிகருமான எம் ஆர் ராதாவின் பேச்சு இடம்பெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் மிகப் பிரபல நடிகராக வலம் வந்தவர் எம்.ஆர்.ராதா. அவரது வாரிசுகள் தான் பிரபல நடிகர் ராதாரவி மற்றும் பிரபல நடிகை ராதிகா சரத்குமார். நடிகர் எம்.ஆர்.ராதா அவரது படங்களில் பேசும் வசனங்கள் மற்றும் அவர் பேசும் ஸ்டைல் தான் இன்றளவும் மக்கள் அவரை நினைவில் வைத்திருக்கிறார்கள். தற்போது ராதிகா பதிவிட்டுள்ள அந்த பதிவில் எம் ராதா வைரஸ் குறித்து பேசியுள்ளார்.

-விளம்பரம்-

இந்த வீடீயோவை பகிர்ந்துள்ள ராதிகா, இதை யாரோ தனக்கு அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை கண்ட பலரும், எம் ஆர் ராதா அன்றே வைரஸ் குறித்து பேசியுள்ளார் அவர் ஒரு தீர்க்க தரிசி என்று கமன்ட் செய்து வருகின்றார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement