நயன்தாரா சினிமாவில் இருந்து விலக இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருக்கிறார் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அதிலும் சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன் நடித்து இருந்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருந்த படம் O2. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.
நயன்தாரா நடிக்கும் படங்கள்:
இப்படத்தை தொடர்ந்து நயன் அவர்கள் கனெக்ட், ஜவான், கோல்ட், காட்ஃபாதர், இறைவன் என்று பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் நடந்து முடிந்தது. ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. இவர்களின் இல்லற வாழ்வு சிறக்க திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். அதோடு கடந்த ஜூன் மாதம் முழுவதும் ஹாட் டாப்பிக்காக இருந்தது விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் தான்.
விடுமுறையை கொண்டாடும் நயன்-விக்கி:
திருமணத்திற்கு பின் விக்கி-நயன்: மேலும், இவர்கள் இருவரும் ஹனிமூனுக்காக வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. சமீபத்தில் முடிவடைந்த 44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை விக்னேஷ் சிவன் தான் நடத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நயன்தாரா அவர்கள் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் உடன் சேர்ந்து மீண்டும் ஜாலியாக ஸ்பெயின் நாட்டில் விடுமுறையை கொண்டாடியிருக்கிறார்.
சினிமாவை விட்டு விலகும் நயன்:
சுற்றுலாவின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இந்த நிலையில் நயன்தாரா சினிமாவில் இருந்து விலக இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, நயன்தாரா அவர்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தற்போது தான் நடித்துக் கொண்டிருக்கும் படங்களை எல்லாம் முடித்துவிட்டு தன்னுடைய பட தயாரிப்பில் மட்டும் நயன்தாரா கவனத்தை செலுத்த இருக்கிறாராம். இதற்கு ஒரே காரணம் தாலி சென்டிமென்ட் தானாம்.
சினிமாவை விட்டு நயன் விலக காரணம்:
எந்த காரணத்தைக் கொண்டும் தாலியை கழட்ட வேண்டாம் என்று நயன்தாராவின் குடும்பத்தினர் கூறி இருப்பதாகவும். இதனால் இவர் நடித்து வரும் படங்களில் கூட தாலியை கழட்டாமல் தான் நடித்து வருகிறாராம். ஆகவே இனி படங்களில் வரும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் போது தாலியை கழட்டி வைத்துவிட்டு நடிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். அதனால் தான் நயன்தாரா சினிமாவில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இன்னொரு பக்கம், நயன்தாரா தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பளிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.