9 ஆண்டு திருமண வாழ்கையில் வந்த விரிசல் ? கணவரை பிரிகிறாரா ரக்ஷிதா ? ஒரு வருடம் ஆச்சமே.

0
1258
rachitha
- Advertisement -

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா. ரக்ஷிதா கர்நாடகாவை சேர்ந்தவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி 3, நாச்சியாபுரம் போன்ற சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். இந்த சீரியலில் கிடைத்த புகழால் ரசிதாவிற்கு சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது. இதுவரை இவர் இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் 2015 ஆம் ஆண்டு ராதாமோகன் இயக்கத்தில் கருணாகரன் நடிப்பில் வெளியான ‘உப்பு கருவாடு’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

பின் சினிமாவில் வரவேற்பு குறைந்தவுடன் இவர் சின்னத்திரை நோக்கி வந்து விட்டார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் மகா என்ற கதாபாத்திரத்தில் ரக்ஷிதா நடித்து இருந்தார். சமீபத்தில் இந்த தொடரில் ரக்ஷிதா விலகிவிட்டார். தற்போது இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் இது சொல்ல மறந்த கதை என்ற புது சீரியலில் நடித்து இருக்கிறார். கூடிய விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. இதனிடையே ரக்ஷிதா அவர்கள் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எட்டு வருடங்களுக்கு முன்பு விஜய் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் இந்த ஜோடிகள் மக்களுக்கு அறிமுகமானாலும் சில ஆண்டுகள் இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள்.

- Advertisement -

ரக்ஷிதா-தினேஷ் இடையே பிரச்சனை:

பின் நிஜ தம்பதிகள் ஆகவே ஆனார்கள். கடந்த சில மாதங்களாகவே இவர்களுக்குள் பிரச்சினை என்ற தகவல் சோசியல் மீடியாவில் வெளிவந்தது. அதுமட்டுமில்லாமல் ரக்ஷிதா- தினேஷ் இருவரும் பேசிக்கொண்டே ஒரு வருடத்துக்கு மேல் இருக்கும் என்ற தகவலும் அவர்களின் நெருக்கமான வட்டாரத்தில் பேசினார்கள். இந்நிலையில் இது குறித்து இவர்களின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் விசாரித்த போது அவர்கள் கூறியது, பிரிவோம் சந்திப்போம் என்று சீரியலில் தான் இரண்டு பேரும் சந்தித்தார்கள். ரக்ஷிதாவுக்கு தமிழ் ஓரளவு தெரியும். ஆனால், தினேஷுக்கு கன்னடம் சுத்தமாக தெரியாது. இருந்தாலும் ரெண்டு பேருக்கு இடையே காதல் உருவானது.

Rachitha-and-her-husband

ரக்ஷிதா-தினேஷ் திருமணம்:

இரண்டு வருடம் காதலித்தார்கள். திருமணத்துக்காக ரக்சிதா வீட்டில் ஆரம்பத்தில் தயங்கினாலும் பின் யோசித்து சம்மதம் கொடுத்து விட்டார்கள். கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி தான் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். அந்த சமயத்தில் தான் ரக்ஷிதாவுக்கு சரவணன் மீனாட்சி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலை தொடர்ந்து ரக்ஷிதா பல சீரியல்களில் நடித்து வந்தார். அப்படியே குடும்ப வாழ்க்கையும் நன்றாகத்தான் பார்த்து கொண்டு வந்தார். இப்படி இருக்கும் போது என்ன பிரச்சனை? என்ன ஆனது? என்று தெரியவில்லை. இருவரும் ஒரு வருஷமாக பேசுவதில்லை. எங்களுக்கு தெரிந்த வரை ரக்ஷிதா சீரியலில் பிசியாக இருக்கிறார்.

-விளம்பரம்-

ரக்ஷிதா-தினேஷ் நடித்த சீரியல்கள்:

தினேஷ்க்கு சீரியல் அமையவில்லை. இந்த விஷயம் கூட இரண்டு பேருக்கும் இடையில் பிரச்சனையை உண்டாகி இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால், இதை அப்படியே நம்மால் நம்ப முடியவில்லை. ஏனெனில் சில வருடங்களுக்கு முன்பு கூட ஜீ தமிழ் சேனலில் நாச்சியார்புரம் என்ற தொடரில் தினேஷுக்கு ஜோடியாக ரக்ஷிதா நடித்திருந்தார். கணவன் மனைவி ஆன பிறகும் இவர்கள் இருவரும் லவ் பேர்ட்ஸ் மாரி தான் சுற்றி இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் ரக்ஷிதா எப்போதுமே தொழிலில் அதிக ஈடுபாடு கொண்டவர். அதேநேரம் குடும்பம் சீரியல் இரண்டையும் பேலன்ஸ் பண்ணவும் தெரிந்தவர். கணவன் மனைவி இரண்டு பேரும் ஒரே துறையில் இருக்கும் போது சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வருவது வழக்கம். அந்த மாதிரி இவர்கள் இடையில் வந்திருக்கலாம்.

ரக்ஷிதா-தினேஷ் பிரிவிற்கு காரணம்:

நண்பர்கள் சிலர் அதில் ஆதாயம் பார்த்து இருக்கலாம். ஆனால், இவர்களுக்கு இடையில் பிரச்சனை பெரிதான நிலையில் இரு வீட்டுப் பெரியவர்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைக்க முயற்சி செய்து இருக்கிறார்கள். இருந்தும் அந்த முயற்சி கை கொடுக்கவில்லை. அதனாலேயே ஒரே வீட்டில் இருந்தால் பிரச்சனை அதிகரிக்கும் என்று சொல்லித்தான் இப்போதைக்கு கொஞ்சநாள் தனித்தனியாக இருக்கலாம் என்று முடிவு செய்து பிரிந்திருக்கிறார்கள். பெரியவர்கள் முயற்சி செய்து தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்று கூறினார்கள். இப்படி பிரிவோம் சந்திப்போம் சீரியலில் சேர்ந்த ஜோடி இப்படி பிரிந்து இருப்பது ரசிகர்கள் பலருக்கும் வருத்தத்தை தந்து இருக்கிறது.மேலும், சீக்கிரத்தில் இவர்கள் சேர வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள்.

Advertisement