பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் இருந்து விலகுகிறாரா காவ்யா ? வைரலாகும் அவரின் இன்ஸ்டா பதிவு.

0
280
kavya
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர் சீரியலை விட்டு முக்கிய பிரபலம் விலக இருக்கும் தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

அதோடு இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் என இந்தியாவில் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியலாக திகழ்கிறது.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

தற்போது சீரியலில் கதிர்- முல்லை இருவரும் சேர்ந்து ஹோட்டல் நடத்திக் கொண்டு வருகிறார்கள். ஆனால், அதில் பெரிய அளவில் லாபம் கிடைக்காததால் அடுத்து என்ன செய்வது? என்று இருக்கிறார்கள். இன்னொரு பக்கம், மூர்த்தியின் அம்மா கனவில் வந்து வீட்டை மாற்றுங்கள் என்று சொன்னதால் வீட்டை விற்ககும் முயற்சியில் மூர்த்தியின் குடும்பம் இருக்கிறது. இதை மீனாவின் அப்பாவே வாங்கி விடலாம் என்று திட்டம் போடுகிறார்.

முல்லை குறித்த தகவல்:

இப்படி பல திருப்பங்களுடன் சீரியல் செல்வது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இந்த தொடரில் இருந்து முக்கிய பிரபலம் விலகி இருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, இந்த தொடரில் முல்லை என்ற வேடத்தில் நடித்து வருபவர் காவியா. இந்த சீரியலில் கதிர்– முல்லை ரொமான்ஸ், கெமிஸ்ட்ரியும் வேற லெவல். இந்த சீரியல் இந்த அளவுக்கு ஹிட் ஆனதற்கு காரணமானவர்களுள் இவர்களும் ஒருவர்.

-விளம்பரம்-

சீரியலை விட்டு விலகும் காவ்யா:

ஆரம்பத்தில் இதில் முல்லையாக நடித்து வந்தவர் விஜே சித்ரா. இவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவருக்கு பதிலாக காவ்யா நடித்து வருகிறார். இப்போது தான் முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா செட்டாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். அதற்குள் இவர் சீரியலில் இருந்து விலக இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, பாண்டியன் ஸ்டோர் பிரபலங்கள் ஸ்டாலின், சுஜிதா, குமரன் ஆகியோருடன் எடுத்த புகைப்படத்தை காவியா தன்னுடைய சோசியல் மீடியாவில் பதிவிட்டு மிஸ் யூ ஆல் என பதிவு செய்திருக்கிறார்.

காவ்யா நடிக்கும் படங்கள்:

இதை பார்த்த ரசிகர்கள் முல்லை பாண்டியன் ஸ்டோர் சீரியலை விட்டு விலகுகிறாரா? என்ற அதிர்ச்சியில் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், இது குறித்து பாண்டியன் ஸ்டோர் சீரியல் எந்த ஒரு அதிகாரப்பூர அறிவிப்பும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சக்திவேல் என்பவர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க காவ்யா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அதில் பரத் மற்றும் வாணி போஜன் கமிட்டாகி இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் காவ்யா வெப் சிரிஸிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement