ஊரடங்கு உத்தரவை மீறி ரோட்டில் வந்தவர்களை தாக்கியதா போலீஸ்? வீடியோவை பகிர்ந்த நடிகை.

0
2756
Pranitha
- Advertisement -

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஒட்டுமொத்த உலகையும் கதி கலங்க வைத்து இருக்கும் விஷயம் இந்த கொரோனா வைரஸ். இந்த கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இந்த கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த கொரோனா வைரஸ் பரவி உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பல்வேறு நாடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதால் அனைத்து சினிமா தியேட்டர்கள், மால்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவிட்டு உள்ளார்கள். இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். தற்போதைக்கு இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான். இந்தியாவில் இதுவரை 5 பேர் இறந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இந்நிலையில் இன்று இந்தியா முழுவதும் அனைத்து மாநில அரசுகளும் பிரதமர் மோடி வேண்டுகோள் படி சுய ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் தேவை இல்லாமல் வெளியில் செல்லக் கூடாது என்றும் மக்கள் அனைவரும் வீட்டிலேயே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்து உள்ளது. கடைகள், உணவகங்கள், பொது இடங்கள், கோயில்கள் என அனைத்துக்கும் தடை செய்யப்பட்டிருக்கிறது. இன்று நடைபெற இருந்த முக்கிய நிகழ்வுகள் எல்லாமே தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

- Advertisement -

இதையும் பாருங்க : மருத்துவர்களுக்கு கை தட்டி நன்றி தெரிவிப்பதில் கூட ரொமான்ஸ் தானா. நயன்-விக்கி புகைப்படத்தை பாருங்க.

இந்நிலையில் நடிகை பிரணிதா அவர்கள் இந்த ஊரடங்கு உத்தரவு குறித்து வீடியோ ஒன்றை போட்டுள்ளார். சுய ஊரடங்கு உத்தரவை மீறி ரோட்டில் சுற்றித் திரிந்த அவர்களை போலீஸ் தாக்கியதாக சமூக வலைதளத்தில் சில வீடியோக்கள் வைரலாக பரவி வந்தது அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சகுனி பட நடிகை பிரணிதா உங்களின் கருத்து என்ன அனைவருமே சட்டத்தை பின்பற்ற இது அவசியமா ? அல்லது இது வன்முறையா ? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

-விளம்பரம்-

உதயன் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை பிரணிதா. பின் இவர் சகுனி, மாசு, எனக்கு வாய்த்த அடிமைகள் என சில படங்களில் வாய்த்த இருந்தார். இவர் தற்போது கன்னட மொழியில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் தான் நடிகை பிரணிதா அவர்கள் கொரோனா வைரஸ் குறித்தும் இந்து மத கலாச்சாரத்தை கிண்டல் கேலி செய்தவர்கள் குறித்தும் கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார்.

அது முன்னெல்லாம் இந்து முறைப்படி கைகூப்பி கும்பிட்டு மற்றவர்களுக்கு வணக்கம் சொல்வார்களையும், சைவ உணவு சாப்பிடுவர்களையும், யோகா செய்பவர்களையும் பார்த்து பலரும் சிரித்தார்கள். ஆனால், தற்போது உலகமே இதை தான் செய்து கொண்டிருக்கின்றது. முன்னால் இதை பார்த்து சிரித்தவர்கள் எல்லாம் தற்போது சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த இந்து பழக்கம் தான் தற்போது கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கிறது என்று கூறியிருந்தார்.

Advertisement