மருத்துவர்களுக்கு கை தட்டி நன்றி தெரிவிப்பதில் கூட ரொமான்ஸ் தானா. நயன்-விக்கி புகைப்படத்தை பாருங்க.

0
6456
Vignesh-Shivan

கடந்த இரண்டு மாதங்களாக இந்த கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போது போரை விட பயங்கர பீதியை ஏற்படுத்தி இருப்பது இந்த கரோனா வைரஸ் தான். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்த கரோனா வைரஸினால் பல்லாயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பல்வேறு நாடுகளை பாதித்த இந்த கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது இந்தியாவையும் கொஞ்சம் கொஞ்சமாக பாதித்து வருகிறது. கொரோனா பாதிப்பை குறைக்கும் விதத்தில் மோடி அறிவித்த இந்த அறிவிப்பிற்கு நாடு முழுவதும் பல்வேறு ஆதரவுகள் குவிந்து வந்தது. மேலும், பல்வேறு பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும், நடிகர் நடிகைகளும் மோடியின் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து தங்களது ஆதரவை கண்டிப்பாக வழங்குவோம் ரசிகர்களும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் வீடியோ மூலமாக கேட்டுக்கொண்டனர்.

- Advertisement -

இதையும் பாருங்க : Breaking News : நடிகரும், இயக்குனருமான விசு காலமானார்.

அதனை தொடர்ந்து தற்போது இன்றைய நாள் முழுவதும் மக்கள் அனைவரும் பெரும்பாலும் அவர்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து இந்த வைரசுக்கு எதிரான தங்களது போராட்டத்தையும் அரசாங்கத்திற்காக ஒத்துழைப்பும் கொடுத்து வருகின்றர்னர். மேலும் இந்த முயற்சியினை இன்று முழுவதும் வெற்றிகாகரமாக செய்த பிறகு இந்த தொற்றுக்கு எதிராக ஓய்வின்றி வேலை செய்துவரும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று மாலை 5 மணிக்கு கைகளை தட்டுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

இதனை அடுத்து தற்போது மாலை வரை பொதுமக்கள் நடமாட்டம் இந்தியா முழுவதும் அதிகம் காணப்படவில்லை. மேலும், இன்று 5 மணியானதும் வீட்டில் இருந்த மக்கள் அனைவரும் மொட்டைமாடிக்கு, வீட்டின் வாசலில் நின்றபடி கைதட்டி கொரோணா பாதிப்பிற்காக அயராது உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார துறை ஊழியர்களுக்கு கை தட்டி நன்றி தெரிவித்தனர்.

தமிழ் சினிமாவை சேர்ந்த பல்வேறு நடிகர் நடிகைகளும் இப்படி கை தட்டி அந்த புகைப்படங்களையும் விடீயோக்களையும் பகிர்ந்தனர். ஆனால், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்களது ஒவ்வொரு கையை இணைத்து ஒன்றாக கைதட்டி நன்றி தெரிவித்து இதிலும் படு ரொமாண்டிகை வெளிகாட்டி இருக்கிறார்கள். அந்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement