பேச்சிலர் வாழ்க்கைக்கு பை பை சொல்லும் பிரேம்ஜி? பிரபல பாடகியுடன் காதலா? லேட்டஸ்ட் இன்ஸ்டா பதிவு.

0
780
premji-1
- Advertisement -

பேச்சிலர் வாழ்க்கைக்கு குட்பை சொல்லும் பிரேம்ஜி. பிரேம்ஜியின் வருங்கால மனைவி குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் பிரேம்ஜி அமரன். இவர் சினிமா உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் மற்றும் வெங்கட்பிரபுவின் சகோதரர் ஆவார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் பாடலாசிரியர், பின்னணி பாடகரும் ஆவார். மேலும், ‘என்ன கொடுமை சார்’? என்ற டயலாக் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். ஆரம்பத்தில் இவர் சினிமாவில் திரைப்படங்களை இயக்கும் இயக்குனராக தான் சினிமா துறைக்குள் நுழைந்தார்.

-விளம்பரம்-

பின் பிரேம்ஜி தனது உறவினரும், இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜாவின் உதவியாளராக இருந்தார். பிறகு ஞாபகம் வருதே படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமா உலகில் அறிமுகனானார். அதனைத் தொடர்ந்து பிரேம்ஜிக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. மேலும், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 என்ற படத்தின் மூலம் தான் பிரேம்ஜி மக்கள் மத்தியில் பிரபலமானார்.

- Advertisement -

பிரேம்ஜி நடித்த படங்கள்:

அதனைத் தொடர்ந்து மங்காத்தா, சேட்டை, கோவா போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பார்ட்டி மற்றும் ஜோம்பி ஆகிய படத்தில் பிரேம்ஜி இசையமைத்துள்ளார். இந்த பார்ட்டி படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, இவருக்கு திருமணம் குறித்து எப்போதும்? ஏன் நடக்கவில்லை? உண்மையாலே இவருக்கு திருமணம் ஆகுமா? என்று சோசியல் மீடியாவில் பல்வேறு கருத்துக்களும் கேள்விகளும் எழுந்து கொண்டே இருக்கும்.

வெளியான பிரேம்ஜி காதல் தகவல்:

அதுமட்டும் இல்லாமல் பிரேம்ஜி அவர்கள் எந்த நடிகையின் போட்டோவுக்கு கமெண்ட் போட்டாலும் அவருடன் காதல் கிசுகிசு என்று பல்வேறு வதந்திகளை கிளப்பி இருந்தார்கள். இந்நிலையில் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் பிரேம்ஜி முரட்டு சிங்கிலில் இருந்து கமிட்டாகி கமிட்டாகியிருக்கிறார். பிரேம்ஜி அவர்கள் இறுதியாக தன்னுடைய பேச்சிலர் லைஃப்க்கு டாட்டா, பாய் பாய் சொல்ல இருக்கிறார். அது வேற யாரும் இல்லைங்க, ஆதலால் காதல் செய்வீர் மற்றும் கில்லாடி போன்ற படங்களில் பாடகியாக பணியாற்றியவர் வினைத்தா.

-விளம்பரம்-

பிரேம்ஜி – வினைத்தா காதல்:

சமீப காலமாகவே பிரேம்ஜி – வினைத்தா ஆகியோர் காதலித்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. பின் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்களா? என்ற சந்தேகமும் ஒரு பக்கம் இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் வினைத்தா இன்ஸ்டாவில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அது என்னவென்றால், வினைத்தா, பிரேம்ஜி உடன் இருக்கும் படத்தை பகிர்ந்து கூறி இருப்பது, ‘உன் கண்களில் நீ என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய் பேபி. நான் என் கைகளுக்கு இடையில் இருட்டில் உன்னுடன் நடனமாடுகிறேன்’ என்று கூறி இருக்கிறார்.

பிரேம்ஜிக்கு குவியும் வாழ்த்து:

இப்படி வினைத்தா பதிவிட்டு இருக்கும் பதிவு மூலம் பிரேம்ஜி உடன் காதலில் இருப்பது உறுதி ஆகி உள்ளது.
அதுமட்டும் இல்லாமல் வினைத்தாவின் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பிரேம்ஜிக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். தற்போது பிரேம்ஜிக்கு 42 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டு காலமாக திருமணம் எப்போ? எப்போ? என்று கேட்ட ரசிகர்கள் பலர் உற்சாகத்தில் உள்ளார்கள். அதோடு பிரேம்ஜி திருமணம் குறித்து ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். பிரேம்ஜி – வினைத்தா பதிலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement