கர்நாடகா, மும்பை, ஹைதராபாத் தொடர்ந்து பலரின் சுற்றுல்லா தளமான முக்கிய இடத்திலும் வீடு வாங்குகிய ராஷ்மிகா.

0
1105
rashmika
- Advertisement -

கோவாவில் இயற்கை சூழலுடன் நடிகை ராஷ்மிகா மந்தனா வாங்கிய புதிய வீடு குறித்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் தற்போது ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கிரீக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு அறிமுகமானார். பின் தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதை கவர்ந்தார் ராஷ்மிகா.

மேலும், கார்த்திக் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சுல்தான் படத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர் அல்லு அர்ஜூன் மற்றும் பகத் பாசில் நடித்து வரும் புஷ்பா படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இந்த படத்தின் லுக் வெளியாகி இருந்தது. அதுமட்டும் இல்லாமல் இவர் பாலிவுட் திரையுலகில் நடிகர் அமிதாப்பச்சனுக்கு மகளாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதேபோல் இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். மேலும், இவர் எங்கு சென்றாலும் ஹோட்டலில் தங்குவதைத் தவிர்க்க புதிய வீடு ஒன்றை வாங்குவார். கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் ஒரு புதிய வீட்டை வாங்கி இருநாதர். சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் கூட ஒரு வீடு வாங்கி இருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது கோவாவில் கூட அம்மன ஒரு புதிய வீட்டை வாங்கியுள்ளார். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா கோவாவில் புதிய வீடு வாங்கி இருப்பதாக சோசியல் மீடியாவில் புகைப்படம் வெளியாகி உள்ளது.

கோவாவில் இந்த புதிய வீடு நீச்சல் குளத்துடன் கூடிய இயற்கை சூழலில் உள்ளது. மேலும், இந்த வீட்டில் நீச்சல் குளம் மற்றும் புத்தர் சிலை இருக்கும் புகைப்படத்தை தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் ராஷ்மிகா. இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வைரலாகி வருகிறது. அதோடு புதிய வீடு வாங்கியதற்கு ராஷ்மிகாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். நீச்சல் குளத்துடன் கூடிய இந்த வீட்டில் நீச்சல் குளம் மற்றும் பக்கத்தில் இருக்கும் புத்தர் சிலையின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு பகிர்ந்துள்ளார்

-விளம்பரம்-
Advertisement