சிவகார்திகேயனுடன் நடிக்க மறுத்தாரா நடிகை ரகுல் ப்ரீத் சிங் ?

0
684
sk
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை ரகுல் பீரித் சிங். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் தான் தமிழ் மொழியில் அறிமுகம் ஆனார். இவர் தமிழில் தீரன், ஸ்பைடர், தேவ் போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தற்போது அயலான் படத்தில் நடித்து வருகிறார். சைன்ஸ் பிக்ஷன் கதைக்களம் கொண்ட படம் தான் அயலான். இந்த படத்தில் நடிகை ரகுல் பீரித் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங் அவர்கள் அயலான் படத்தில் நடிக்க மறுத்ததாக வெளியான வதந்திக்கு பதிலளித்துள்ளார்.

-விளம்பரம்-

தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் அயலான். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீதி சிங், இஷா கோபிகர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தை 24 ஏ.எம். நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது இந்தப் படத்தின் உரிமை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் அயலான் படக்குழுவினர் மீண்டும் படப்பிடிப்புக்காக ரகுல் ப்ரீத் சிங்கை அழைத்த போது அவர் இப்போதைக்கு வர இயலாது என்று கூறிவிட்டதாக செய்திகள் வெளியாயின. இதனால் படக்குழுவினர் ரகுல் ப்ரீத் சிங் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும், படத்தில் இருந்து ரகுல் ப்ரீத் சிங் விலகுவதாகவும் தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன. இதை அறிந்த ரகுல் ப்ரீத் சிங் அவர்கள் டீவ்ட் ஒன்று போட்டு உள்ளார். அதில் அவர் கூறியது, எப்போது நமக்குப் பொறுப்புள்ள பத்திரிகைகள் கிடைக்கும். எப்போது ஊடகங்கள் உண்மைத்தன்மையைத் தெரிந்துகொள்ளத் தொடங்கும். சில கூடுதல் ஹிட்களுக்காக மிகவும் கீழாக இறங்குகிறார்கள்.

யார் இப்போது முதலில் படப்பிடிப்பு தொடங்குகிறார்கள் என்று தயவுசெய்து எனக்குச் சொல்லுங்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும், இந்த டீவ்ட் தொடர்பாக ‘அயலான்’ இயக்குநர் ரவிக்குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பது, நான் பணிபுரிந்ததில் ரகுல் ப்ரீத் சிங் மிகவும் ஈடுபாடு கொண்ட நடிகை. ஆனால், ஊடகங்களில் வந்த தகவல் பொய்யானது. இந்த வதந்திகளுக்கு ஊடகங்கள் உடந்தையாக இருப்பது கஷ்டமாக இருக்கு. நிலைமை சீரானதும் படப்பிடிப்பை நிறைவு செய்யவும் ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று கூறி உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement