அசுரன் படத்தில் வந்த மெட்டு என்னுடையதுனு பொய் சொன்னாரு – சீமானை விமர்சித்த Anchor, பதிலடி கொடுத்த ரசிகர்கள்.

0
750
seeman
- Advertisement -

அசுரனின் ‘எள்ளு வய பூக்களையே’ பாடலின் மெட்டு சீமான் பாடிய நாட்டுப்புறப் பாடலை தழுவியது தான் என்ற உண்மை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் தனுஷ். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் தனுஷின் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த படம் அசுரன்.

-விளம்பரம்-

இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் மஞ்சு வாரியர், பாலாஜி சக்திவேல், பிரகாஷ்ராஜ், பவன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். பூமணி எழுதிய வெக்கை புதினத்தினை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

- Advertisement -

அது மட்டும் இல்லாமல் 67வது தேசிய விருதுகள் அறிவிப்பில் இந்த படத்திற்கு பல பிரிவுகளில் தேசிய விருதுகள் வாங்கியிருந்தது. மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற எள்ளு வயப் பூக்களையே என்ற பாடல் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானது என்றே சொல்லலாம். இந்நிலையில் இந்த பாடலை சீமான் வரிகளில் இருந்து தான் எடுக்கப்பட்டது என்ற ஒரு தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது, இந்த பாடல் குறித்த பேட்டி வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் ஊடகவியலாளர் விஷன் என்பவர் தன்னுடைய வாழ்க்கை அனுபவம் குறித்தும், அரசியல் தலைவர்களுடன் உரையாடல் குறித்தும் பேசி இருந்தார். அப்போது அதில் அவர் சீமானின் பெயரை குறிப்பிடாமல் இந்த பாடல் குறித்து கூறியிருந்தது, மைக் எடுத்தால் பொய் பேசுவது ஒன்று, வாழ்க்கையே பொய்யாக உள்ளது. எள்ளு வயப் பூக்களையே பாடலின் மெட்டு என்னுடைய தான்.

-விளம்பரம்-

நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளேன். என்னுடைய நாட்டுப்புற பாடலை தழுவி தான் எள்ளு வயப் பூக்களையே பாடலின் மெட்டு அமைக்கப்பட்டது. வெற்றிமாறன் மற்றும் ஜி.வி. பிரகாஷ் இதற்கு கிரெடிட் தருகிறேன் என்று சொன்னார்கள். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்று தமிழக தேர்தல் பிரச்சாரத்தின் போது என்னிடம் அந்த தலைவர் பகிர்ந்து கொண்டார் என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தான் அந்த வீடியோவில் குறிப்பிட்டு இருக்கின்றனர் என்று பதிவிட்டு வருகின்றனர்.

இதனை அடுத்து இந்த பாடலை குறித்து பாடலாசிரியர் யுகபாரதி கூறியிருந்தது, சீமான் அவர்களும் வெற்றிமாறன் அவர்களும் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்கள் தான். இந்த பாடலைப் பொருத்தவரை நாட்டுப்புறப் பாடலாக அவர் பாடிய மெட்டின் தழுவல் உண்டு. அவர் பாடியது பிடித்து போய் அதிலிருந்து தொடங்கியது தான் இந்த பாடல். இதற்கு முழுமையாய் பாடல் எழுதியது நான். இசையமைப்பது ஜி வி பிரகாஷ். ஆனால், இது ஒரு இன்ஸ்பிரேஷன் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று கூறி இருந்தார்.

Advertisement