மீண்டும் சிம்புவின் படம் Drop – இயக்குனரை தேடும் தயாரிப்பு நிறுவனம். (இவருக்கு மட்டும் ஏன் இப்படி)

0
203
simbu
- Advertisement -

சிம்பு நடிக்கும் அடுத்த படம் ட்ராப் ஆகி இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருக்கிறார் சிம்பு. இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகனாக வலம் வருகிறார். இருந்தாலும் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. நடுவில் சிம்புவின் சில படங்கள் தோல்வி அடைந்து இருந்தாலும் செக்கசிவந்தவானம், வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-
Simbu

அதோடு சமீப காலமாகவே சிம்பு அவர்கள் தன்னுடயை படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வந்த மாநாடு படம் பல தடைகளை கடந்து வெளியாகி இருந்தது. மாநாடு படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இந்த படத்தை பிரபு காமாட்சி தயாரித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். யுவன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். படத்தில் சிம்பு வேற லெவல் மிரட்டி இருந்தார்.

- Advertisement -

மாநாடு படம்:

டைம் லூப் என்ற ஒரு புதிய கான்செப்ட்டை அழகாக கையாண்டிருக்கிறார் இயக்குனர். அதோடு நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இந்த படத்தின் வசூல் குறித்து டுவிட்டரில் அதிகாரபூர்வமாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார். அதில் அவர், மாநாடு படத்தின் வசூல் 117 கோடியை கடந்து இருப்பதாக கூறியிருந்தார். இதனை தொடர்ந்து சிலம்பரசன் அவர்கள் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

வெந்து தணிந்தது காடு படம்:

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த படத்தில் கௌதம் மேனன், சிம்பு இணைந்து இருக்கிறார்கள். இந்த படத்தில் பாடலாசிரியராக தாமரையும், இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் அவர்களும் பணிபுரிந்து வருகிறார்கள். ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. ‌‌ மேலும், இந்த படம் சிலம்பரசனின் 47 வது படமாக உருவாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சிம்பு படம் ட்ராப்:

அதன் தொடர்ச்சியாக பத்து தல என்ற படத்திலும் சிம்பு நடிக்கிறார். இப்படி அடுத்தடுத்து சிம்பு சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். இதனிடையே தந்தை டி ராஜேந்திரன் உடல்நிலை பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இதனால் சிம்பு தந்தையின் சிகிச்சையில் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் படத்தின் சூட்டிங் தாமதமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் பத்து தல படத்தின் இறுதிகட்ட சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும். இந்நிலையில் சூட்டிங் தள்ளிப் போய் இருக்கும் சூழலில் சிம்பு அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தை ட்ராப் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

படத்தில் விலகிய சிம்பு:

சிம்பு அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் கொரானா குமார். இந்த படத்தை இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்குகிறார். இந்த நிலையில் இந்தப் படத்தை டிராப் செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேசனிடம் இதுகுறித்து தெரிவித்ததை அடுத்து வேறொரு படத்தில் நடித்து தர சிம்பு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமில்லாமல் தயாரிப்பு நிறுவனம் புதிய இயக்குனரை தேடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் தொடர்பாக லிங்குசாமியிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது.

Advertisement