முன்னாள் காதலிகளை தோழிகளாக வைத்திருபவர்கள் இதுக்காக அலைபவர்கள் – திரிஷா போட்ட பதிவு.

0
8363
rana
- Advertisement -

தெலுங்கு சினிமாவில் வெளியான பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் நடிகர் ராணா. தமிழில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த ‘ஆரம்பம்’ படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பரிட்சியமானார் நடிகர் ராணா. ஆனால், பாகுபலி திரைப்படம் தான் இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது. நடிகர் ராணாவிற்கும் நடிகை திரிஷாவுக்கும், இடையில் காதல் என தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மீடியாவிலும் பல முறை செய்திகள் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், இருவருமே இதனை மறுத்து வந்தனர்.

-விளம்பரம்-
Rana Daggubati makes engagement with Miheeka Bajaj 'official'

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிஹீகா பாஜாஜ் என்ற பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ‘அவங்க சரினு சொல்லிட்டாங்க’ என்று குறிப்பிட்ட அணைத்து வதந்திகளுக்கும், சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். சமீபத்தில் கூட இவர்களது நிட்சயதார்தம் முடிந்துவிட்டதாக சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. ஆனால், அது நிச்சயதார்த்தம் கிடையாது, திருமணத்திற்கு முன்பாக இரன்டு குடுமபத்தினர் சந்திக்கும் ஒரு முறை என்று கூறி இருந்தார் ராணாவின் தந்தை.

- Advertisement -

சமீபத்தில் தனது வருங்கால மனைவி குறித்து பேசிய ராணா, மிஹீகாவை எனக்கு பல வருடங்களாக தெரியும். எனது வீட்டின் பக்கத்தில்தான் அவரது வீடும் இருந்தது. அவருடன் அதிக நாட்கள் பழகி இருக்கிறேன். அவரது குணம் எனக்கு பிடித்தது.என் வாழ்க்கை துணையாக மிஹீகாதான் சரியானவர் என்று தோன்றியதுதிரையுலகில் இருப்பவரை மணக்க நான் எப்போதுமே நினைத்தது இல்லை. நான் திருமணம் செய்து கொள்ளப்போவதை அறிந்து எனது முன்னாள் காதலிகள் வாழ்த்து தெரிவித்தனர் என்று கூறியிருந்தார் ரானா.

இந்த நிலையில் ராணாவின் முன்னாள் காதலி என்று கிசுகிசுக்கப்பட்ட நடிகை திரிஷா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில் முன்னாள் காதலியை இந்நாள் நண்பர்களாக வைத்திருப்பவர்கள் “அந்த” உறவிற்காக அவளது உடலை மட்டுமே நேசிக்கும் மனநோயாளிகள் (narcissistic psychopath) என்று பிரபல Personality and Individual Differences ஆய்வின் தகவல் என்று அதில் குறிப்பிடப்பிருந்தது. மேலும், அதில் திரிஷா ‘எனக்கு தெரியும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். திரிஷாவின் இந்த பதவு ராணாவிற்கு பதிலடியா என்று தான் தெரியவில்லை.

-விளம்பரம்-
Advertisement