விஜய்யின் வாரிசு படத்தால் வம்சிக்கு இப்படி ஒரு நிலையா ? – ஒதுக்குகிறதா தெலுங்கு சினிமா ?

0
1164
Vamsi
- Advertisement -

விஜய்யின் வாரிசு பட இயக்குனருக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா போன்ற பலர் நடித்து இருக்கின்றனர். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். இந்த படம் குடும்ப பின்னணியை கொண்ட கதை. படத்தில் மிகவும் பெரிய தொழிலதிபராக சரத்குமார் இருக்கிறார். அவருக்கு ஸ்ரீகாந்த் ,ஷாம், விஜய் என்று மூன்று மகன்கள் இருக்கிறார்கள். இதில் ஸ்ரீகாந்த் மற்றும் ஷியாம் இருவருமே தந்தை பேச்சை மீறாமல் நடக்கும் பொம்மைகள் போல இருக்கிறார்கள்.

- Advertisement -

வாரிசு படம்:

அதில் விஜய் மட்டும் தன்னுடைய கனவு, லட்சியம் என்று தனக்கான அடையாளத்தை தானே உருவாக்க ஆசைப்படுகிறார். ஒரு கட்டத்தில் தன்னுடைய நிர்வாகப் பொறுப்பை சரத்குமார் விஜய்யிடம் ஒப்படைக்க அதை அவர் ஏற்க மறுப்பதால், அவரை வீட்டை விட்டு வெளியேற சொல்லுகிறார். பின்னர் ஒரு கட்டத்தில் சொந்த குடும்பத்தில் செய்த சூழ்ச்சிகளால் தொழிலில் பல சறுக்களை சந்திக்கிறார் சரத்குமார். சரத்குமாரின் தொழில் ஏன் நஷ்டம் அடைந்தது ? குடும்பத்தினர் செய்த சதி என்ன ? அதனால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன? விஜய் மீண்டும் மீட்டெடுத்து வந்தாரா? என்பது தான் மீதி கதை.

படம் குறித்த தகவல்:

இந்த படம் இந்த ஆண்டு ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகி இருந்தது. அதேபோல் வாரிசு படம் வெளியாகிய அன்றே நடிகர் அஜித் நடித்த துணிவு படமும் வெளியாகி இருந்தது. இந்த ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும், வாரிசு படம் உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. ஆனால், சமீபத்தில் கேரள விநியோகஸ்தர் வாரிசு படத்தால் தனக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறி இருந்தார்.

-விளம்பரம்-

வம்சி நிலைமை:

இது குறித்து சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு வாரிசு படத்தின் ரிலீஸுக்கு முன்பு வம்சி அவர்கள் பல பேட்டிகள் கொடுத்திருந்தார். அந்த படத்தை விமர்சித்து இருந்தவர்களுக்கு பதில் அடியும் கொடுத்திருந்தார். இந்த நிலையில் விஜயின் வாரிசு பட இயக்குனருக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இயக்குனர் வம்சி தெலுங்கில் மிக பிரபலமான இயக்குனர் ஆவார். இவர் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுத்து இருக்கிறார். கடைசியாக இவர் விஜயின் வாரிசு படத்தை தான் இயக்கி இருந்தார்.

நெட்டிசன்கள் விமர்சனம்:

வாரிசுக்கு பிறகு வம்சி அவர்கள் எந்த ஒரு படத்திலும் கமிட்டாகவில்லை. காரணம், வாரிசு படம் தெலுங்கு ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. இதனால் தான் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கொடுக்க முன்னணி இயக்குனர்கள் தயங்குவதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் வம்சி அவர்கள் நிறைய நடிகர்களுக்கு கதை கூறியிருக்கிறார். இருந்தாலும் எந்த ஒரு நடிகருமே இதுவரை ஓகே சொல்லாமல் இருக்கிறார்கள். இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து விஜய் வைத்து படம் எடுத்தவருக்கு இந்த நிலைமையா? என்ற நெட்டிசன்கள் விமர்சித்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Advertisement