தமிழ் சினிமா உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த “பிகில்” படம் ரசிகர்கள் மத்தியில் தெறிக்க விட்டது. பிகில் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது.

இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷை நீக்கி விட்டதாக சோசியல் மீடியாவில் பல கருத்துக்கள் எழுந்து கொண்டு இருக்கின்றனர். மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சில பிரச்சனைகள் நடந்ததாகவும், அதைப்பற்றி படத்தின் தயாரிப்பளர் சேவியர் பிரிட்டோ விஜய்யிடம் சொன்னதாகவும் அதனால் தான் நடிகர் விஜய், ஜெகதீஷை தன்னுடைய டீமில் இருந்து நீக்கிவிட்டதாகவும் செய்திகள் பரவியிருக்கின்றன.
இது குறித்து ஜெகதீஷ்க்கு நெருக்கமான சில நண்பர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியது, சோசியல் மீடியாவில் வருவது எல்லாம் முழுக்க முழுக்கப் பொய்யான செய்தி. ஜெகதீஷூக்கு வேண்டாதவர்கள் தான் இப்படிச் செய்திகளை பரப்புகிறார்கள். அதோடு ஜெகதீஷைப் பற்றி இப்படி வதந்திகள் வருவது எல்லாம் முதல் முறையல்ல.

தொடர்ந்து அவரைப்பற்றி நெகட்டிவ் செய்திகள் பரவுகின்றன. ஜெகதீஷ் விஜய் சாருடன் தான் இருக்கிறார். இருவரும் தொடர்ந்து பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். விரைவில் தளபதி விஜய்யுடன் ஜெகதீஷைப் பார்ப்பீர்கள்' என்று கூறினார்கள். இதனால் விஜய்யின் மேனேஜர் நீக்கப்பட்டார் என்ற தகவல் பொய்யானது என்று கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து ஜெகதீஷ் விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





