மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய இந்த அரசியல் வசனங்கள் எடிட் செய்யபட்டு விட்டதா ?

0
18185
Master
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி இருந்தது. இந்த பாடல் வெளியாகி சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று ஹோட்டல் லீலா அரண்மனையில் கோலாகலமாக நடை பெற்றது. இந்த விழாவில் விஜய், விஜய் சேதுபதி, லோகேஷ், சாந்தனு, சேத்தன்,கௌரி கிஷன், அர்ஜுன் தாஸ், ஷோபா, சந்திரசேகர், அனிருத் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இந்த இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் அவர்கள் நடனமாடி ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தார். அதைத் தொடர்ந்து அவர் குட்டி கதை ஏதும் சொல்லாமல் நதியை வைத்து ஒரு பொதுவான விஷயத்தை சொல்லி இருந்தார்.

மேலும், விஜய் அவர்கள் வழக்கம் போல் இல்லாமல் இந்த முறை அவருடைய உடை முறை மாறுபட்டு இருந்தது. அது குறித்து கேட்டதற்கு என்னுடைய நண்பர் அஜித்தை போல் வரலாம் என்று வந்தேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் விஜய் அவர்கள் இசை வெளியீட்டு விழாவில் சீப்பான பப்ளிசிட்டியை தேடிக் கொள்கிறார் என்று இந்து மக்கள் கட்சி சார்பாக அர்ஜுன் சம்பத் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இப்படி இவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் கருத்து சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

-விளம்பரம்-

மேலும், நேற்று இசை வெளியிடு விழாவில், மக்களுக்கு தேவையானதை தான் சட்டமாக உருவாக்க வேண்டுமே தவிர சட்டத்தை உருவாக்கி விட்டு மக்களை அதில் அடைத்து வைக்கக் கூடாது என்று விஜய் பேசியதாக யாரோ ஒருவர் கிளப்பி விட்ட வதந்தி சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது. ஆனால், விஜய் எல்லாம் அப்படி பேசவில்லை என்பது தான் உண்மை. அது தெரியாமல் இந்து மக்கள் கட்சி சார்பாக அர்ஜுன் சம்பத் அவர்கள் இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து தனது டுவிட்டரில் கூறியது, விஜய் அரசுக்கு எதிராக ஆத்திரத்துடன் பேசி மீண்டும் சீப்பான பப்ளிசிட்டியை தேடி வருகிறார் என்று கூறியிருந்தார்.

இது பார்த்த ரசிகர்கள் அனைவரும் விஜய் சொல்லாத கருத்துக்கு இப்படி எல்லாம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்றும் கிண்டலும் ஆத்திரத்துடன் கருத்துக்களையும் பதிவிட்டும் வருகின்றனர். பொதுவாகவே விஜய் அவர்கள் தன்னுடைய இசை வெளியீட்டு விழாவில் ஏதாவது ஒரு அரசியல் பத்தி பேசி சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தும். அதுமட்டுமில்லாமல் அவர் படம் ரிலீசுக்கும் பிரச்சினையாக அமைந்தது. இதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு அவர் நேற்று இசை வெளியீட்டு விழாவில் எந்த ஒரு அரசியல் குறித்தும் பேசவே இல்லை.

இது தொடர்பாக ரோகினி சில்வர் ஸ்கிரீன் அவர்கள் கூட விஜய் இப்படி எல்லாம் பேச வில்லை என்றும் கூறியிருக்கிறார்கள். இது ஒரு பக்கமிருக்க சன் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானதால் அரசியல் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக சன் நிறுவனம் அதை கட் செய்து இருப்பார்களோ? என்று மீடியா பக்கம் பேசப்பட்டு வருகிறது. விஜய் படம் என்றாலே சர்ச்சைக்கும், கலவரத்துக்கும் பஞ்சமிருக்காது. அந்தவகையில் மாஸ்டர் படத்திற்கு பல பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கின்றது.

Advertisement