தற்போது பலரும் கேட்கும் ஒரே கேள்வி என்னவெனில் விஸ்வாசம் படம் வெளியாகி இத்தனை குறைவான நாட்களிலே எப்படி 125கோடி வசூல் செய்தது. அதுவும் ரஜினி படத்திற்கு பொடியாக எப்படி அதை விட அதிகமான வசூலை செய்த்து என்பது தான்.
இந்த அணைத்து கேள்விகளுக்கும் விஸ்வாசம் படத்தின் விநியோகிஸ்தரான கோட்டபாடி ராஜேஷ் விளக்கமளித்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் எப்படி விஸ்வாசம் இத்தனை குறைவான நாட்களில் 125 கோடி வசூல் செய்தது என்று கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது பேசிய கோட்டபாடி ராஜேஷ், உன்மையில் ரஜினி சாறுடன் விஸ்வாசம் படம் மோதபோகிறது என்று நானும் முதலில் பயந்தேன். ஆனால், அதனை அனைத்தயும் ரசிகர்கள் உடைத்து விட்டார்கள். இரண்டு தரப்பு ரசிகர்களும் அணைத்து சந்தேகங்களையும் உடைத்துவிட்டனர்.
இரண்டு பெரிய படங்கள் ஒரே சமயத்தில் வரலாம் என்று இந்த இரண்டு படங்களும் நிரூபித்து விட்டது. விஸ்வாசம் 125 கோடி வசூல் செய்ததற்கு முக்கிய காரணமே திரையரங்கில் வருகை அதிகமாகி கொண்டே இருப்பது தான். அஜித் சாரின் ரசிகர்கள் உயிரை கொடுக்கின்றனர். ஒரு சில திரையரங்குகளில் இரவு 2.30 காட்சிகள் கூட ஓடுகிறது.
மேலும், மீண்டும் மீண்டும் படத்தை பார்க்க குடும்பங்களுடனும், நண்பர்களுடன் வருகை அதிகரித்து கொண்டே இருப்பதால் 6 காட்சி 7 காட்சி என்று போய்கொண்டே இருக்கிறது. விஸ்வாசம் , பேட்ட ஆகிய இரண்டு படங்களுமே சாதனைகளை முறியடித்து விட்டது.