கத்தி படத்தில் இந்த தவறை கவனித்துள்ளீர்களா ? இப்படி பண்ண சாத்தியமே இல்லை.

0
14712
kathi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நடிப்பில் ஜாம்பவான் ஆகவும், வசூலில் மன்னனாகவும் திகழ்பவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்த பிகில் படம் திரையரங்குகளில் பட்டையை கிளப்பியது. பிகில் படம் உலக அளவில் வசூல் சாதனை செய்தது. விஜய் அவர்களின் திரையுலக பயணத்தில் மைல்கல்லாக கத்தி படம் அமைந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனரான ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த கத்தி படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

-விளம்பரம்-
இது facetime இல்லை வெறும் front கேமரா என்பதை காணலாம்

இந்த படத்தில் விஜய், சமந்தா, சதீஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தப் படத்தில் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். சமூக பிரச்சனையை மையமாக கொண்ட படம்.. இந்நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் காட்டப்படும் புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் அவர்களை வில்லன் பிடித்து வைத்து மிரட்டுவார். அப்போது வில்லன் ஐ போனில் போனில் face time மூலம் விஜயின் முகத்தை காண்பிப்பதாக கூறுவார்கள். ஆனால், உண்மையாலுமே ஐ போனின் face time-ல் அவர் வீடியோ கால் செய்திருக்க மாட்டார். அந்த காட்சி ஐபோனின் Front கேமராவின் மூலமாகத் தான் பதிவு செய்து காண்பித்துள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

face time-ல் கால் செய்தால் இப்படித்தான் தான் வரும்

தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிகில் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. மாஸ்டர் படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement