பொன்னியின் செல்வனில் நடிக்கிறாரா ஷாலினி ? அஜித் ரசிகர்களின் 21 ஆண்டு காத்திருப்புக்கு கிடைத்த விடை.

0
700
shalini
- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை ஷாலினி நடித்து இருப்பதாக கூறும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதை தற்போது திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இவர் வித்யாசமான கதைகளை இயக்கி சினிமா உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். அந்த வகையில் இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் சினிமா உலகில் முன்னணி நடிகர்களான பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடவிருக்கிறார். அதோடு ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம்:

தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டது. பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து இருக்கிறது. இப்படத்தின் இரண்டு பாகங்களும் 800 கோடி பட்ஜெட் செலவில் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஷாலினி ரீ-என்ட்ரி:

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ஷாலினி அஜீத் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் முதல் பாகத்தில் ஷாலினி அவர்கள் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷாலினி சினிமாவில் நடித்துள்ள தகவலால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து இருக்கிறார்கள். இதனால் பலரும் இந்த படத்தின் ரிலீஸுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியது:

இந்நிலையில் இது குறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியிருப்பது, பொன்னியின் செல்வன் படத்தில் ஷாலினி அஜித்குமார் நடிப்பதாக வெளியான தகவலில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை. இது முற்றிலும் தவறான தகவல். ஷாலினி அஜித்குமார் மீண்டும் வெள்ளித்திரையில் காணலாம் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான், அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்று கூறியிருந்தார். இதன் மூலம் ஷாலினி எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை என்பது உறுதியானது.

ஷாலினி குறித்த தகவல்:

குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார் ஷாலினி. அதன் பின் அவர் பல படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். ஷாலினி அவர்கள் அஜீத் குமாருடன் அமர்க்களம் என்ற படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் 2000 ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு ஷாலினி படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். தற்போது மகன் மற்றும் மகளுடன் ஷாலினி குடும்பத்தை பார்த்து வருகிறார்.

Advertisement