விஜய் மீது கொண்ட அன்பால் விஜய்யாகவே மாறிய வெளிநாட்டு பெண் ரசிகை. வீடியோ இதோ.

0
1375
Vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். இவருடைய பெயரில் நிறைய ரசிகர் மன்றமும் உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதால் ஆங்காங்கே விஜய் ரசிகர் நற்பணி மன்றங்கள் மூலம் விஜய் ரசிகர்கள் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். அதே போல நடிகர் விஜய்க்கு ரசிகர்களை போல ரசிகைகளும் அதிகம் தான்.

-விளம்பரம்-

ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அந்த அளவிற்கு இல்லை என்றாலும். இளைய தளபதியாக பெயர் வாங்கிய பின்னர் தங்களுக்கு விஜய் மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என்று பல பெண்களும் ஆசைப்பட்டத்தை நாம் மறுக்க முடியாது. அதே போல தற்போது இருக்கும் தலைமுறையில் ரசிகைகள் அனைவரும் விஜய்யை அண்ணன் என்ற ஸ்தானஸ்தில் தான் பார்த்து வருகின்றனர்.

- Advertisement -

பொதுவாக ரசிகர்கள் தான் விஜய் பெயரை பச்சை குத்திக்கொள்வது, விஜய் படம் வந்தால் திருவிழா போல கொண்டாடுவார்கள். ஆனால், ரசிகர்களுக்கு இணையாக நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துள்ளார் இந்த ரசிகை. நடிகர் விஜய்யின் தீவீர ரசிகையான இந்த பெண் விஜய்யை போலவே வேடமிட்டு விஜய் மீது தனக்கு இருக்கும் அன்பை காட்டியுள்ளார்.

நடிகர் விஜய் தற்போது பிகில் படத்தை தொடர்ந்து ‘மாஸ்டர்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பணிகள் எப்போதோ நிறைவடைந்து வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக படத்தின் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டது. சமீபத்தில் இந்த படம் OTT தளத்தில் வெளியாகும் என்று வதந்திகள் பரவியது. ஆனால், மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக திரையரங்கில் தான் வெளியாகும் என்று மாஸ்டர் படக்குழு அறிக்கை வெளியிட்டது.

-விளம்பரம்-
Advertisement