10 வயசு வரைக்கும் ரெண்டு கையும் இருந்துச்சி. மாற்றுத்திறனாளி தன்ஸீன் வாழ்வில் ஏற்பட்ட சோகம்.

0
995
tanseen
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் மாற்றுத்திறனாளி தன்ஸீன் என்பவர் மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலை வகித்திருந்தார். மேலும், அந்த பதிவில், விஜய் மற்றும் அனிருததை டேக் செய்திருந்த லாரன்ஸ், வீடியோவில் இருக்கும் நபர் தன்னுடைய குழுவில் தான் இருக்கிறார் என்றும், அவர் தனது காஞ்சனா படத்தில் நடித்துள்ளார் என்றும், அவருக்கும் அனிருத்தின் இந்த பாட்டை விஜய்யின் முன்னாள் வாசிக்க வேண்டும் என்பது தான் ஆசை. இந்த வீடியோவை தயவு செய்து பாருங்க என்று குறிப்பிட்டிருந்தார்.

-விளம்பரம்-

இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக நிலையில் அந்த மாற்றுத்திறனாளியின் ஆசையை விஜய் நிறைவேற்றுவதாக லாரன்ஸின் கூறியுள்ளாராம். இதுகுறித்து அன்னையர் தினமானத்தன்று பதிவிட்டிருந்த லாரன்ஸ், தான்சேன் குறித்து பதிவிட்டு அனிருத் மற்றும் நண்பன் விஜய்க்கும் நான் வேண்டுகோள் வைத்ததை அடுத்து நேற்றிரவு, நண்பன் விஜய்யிடம் பேசினேன். லாக்டவுன் முடிந்ததும் அந்த இளைஞரை அழைத்து வந்து வாசித்துக் காட்ட சொன்னார்.

- Advertisement -

அனிருத்தும் வாய்ப்புக் கொடுப்பதாகக் கூறியுள்ளார். அந்த இளைஞரின் கனவு நனவாக காரணமாக இருக்கும் நண்பன் விஜய்க்கும் அனிருத்துக்கும் பெரிய நன்றி என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் மாற்றுத்திறனாளி தன்சீனை பல்வேறு மீடியாக்களும் பேட்டி எடுத்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தன்ஸீன் தனக்கு எப்படி கை போனது என்பதை குறிப்பிட்டுள்ளார்.

அதில், சிறுவயது முதலே எனக்கு இசை மீது மிகுந்த ஆர்வம் இருந்தது எனக்கு 10 வயது வரை இரண்டு கைகளும் இருந்தது. ஆனால், விளையாடிக் கொண்டிருக்கும் போது கரண்ட் ஷாக் அடித்து இரண்டு கையும் போய் விட்டது. அதன் பின்னர் சிறிது காலம் நான் வாசிப்பதை நிறுத்தி விட்டேன். பின்னர் கல்லூரி படிக்கும்போதுதான் மீண்டும் வாசிக்க ஆரம்பித்தேன் என்று கூறியுள்ளார். மேலும், தான் ஒரு தீவிர விஜய் ரசிகர் என்றும், விஜய்யை மட்டும் நேரில் பார்த்தால் எனக்கு பேச்சே வராது என்று கூறியுள்ளார் தன்ஸீன்.

-விளம்பரம்-
Advertisement