மறைந்த கால்பந்து ஜாம்பவான் மாரடோனாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த பிகில் பட நடிகர். இவருக்கும் கால்பந்தாட்டத்ற்க்கும் என்ன சம்மந்தம் தெரியுமா ?

0
7334
vijayan
- Advertisement -

கால்பந்து ஜாம்பவான் மாரடோனா மாரடைப்பு காரணமாக மரணமடைந்த நிகழ்வு விளையாட்டு உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜெண்டினா  நாட்டை சேர்ந்த இவர், 3 வயதில் கால்பந்து விளையாட தொடங்கினார். தனது 8வது வயதில் அர்ஜென்டினா ஜூனியர்ஸ் அணியின் கால்பந்தாட்ட குழுவில் இடம்பெற்றார்.1986 ஆம் ஆண்டு அர்ஜென்டினா அணியின் கேப்டனாக செயல்பட்டு கால்பந்து உலகக்கோப்பையை வென்று கொடுத்தார்.கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு பல கிளப் அணிகளுக்கு பயிற்சியாளராக செயல்பட்ட அவர், இறுதியாக ஜிம்னாசியா டிலா பிளாடா அணிக்கு பயிற்சியாளராக இருந்தாா்.

-விளம்பரம்-

மரோடோனா 2000 ஆம் ஆண்டு போதைப்பொருள் பழக்கத்தால் மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தின் விளிம்பு வரை சென்று அதிலிருந்து மீண்டார்.அதன்பிறகு போதைப் பொருள் பயன்பாட்டை நிறுத்திக் கொண்ட அவர், சமீபத்தில் மூளையில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். இதன்பின் கடந்த 11 ஆம் தேதி வீடு திரும்பிய அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர்பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கால்பந்து பிரபலங்கள், ரசிகர்கள் சமூகவலைத்தளங்கள் மூலம் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

மாரடோனா நாட்டை சேர்த்தவர் மட்டுமல்லாது உலகில் உள்ள பல ரசிகர்கள் இவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள். இப்படி ஒரு நிலையில் பிகில் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் விஜயன், மாரடோனாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார். சரி, இவருக்கும் மாரடோனாவிற்கும் என்ன சம்மந்தம். மாரடோனாவை போல இவரும் ஒரு கால்பந்தாட்ட வீரர் தான் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.

This image has an empty alt attribute; its file name is vijayan-1-1024x1024.jpg

கேரள மாநிலம் திருச்சூரை பூர்வீகமாக கொண்ட இவர் வறுமையின் காரணமாக ஆரம்பத்தில் திருச்சூர் முனிசிபாலிட்டி மைதானத்தில் சோடா விற்று வந்தார். சிறுவயது முதலே கால்பந்தாட்டத்தில் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த விஜயன், பின்னர் கேரள டிஜிபி மூலமாக கேரளா காவல்துறையில் கால்பந்தாட்ட கிளப்பில் தனது 17 வயதில் இணைந்தார். கேரள காவல்துறை கால்பந்தாட்ட அணியில் சிறப்பாக செயல்பட்டு வந்த விஜயன் பல்வேறு போட்டிகளில் தனது அபார ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார்.

-விளம்பரம்-

2003ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து விலகினார். இதுவரை 40 சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடிய விஜயன், 29 கோல்களை அடித்துள்ளார். கால்பந்தாட்ட விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கினார். மலையாளத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ஷாந்தம் என்ற படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை துவங்கிய விஜய், விஷால் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் ஸ்ரியா ரெட்டியின் அண்ணனாக நடித்திருந்தார். மலையாளத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயன் தமிழில் திமிரு, கொம்பன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Advertisement