மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகர் திலீப்பின் விவகாரம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மலையாள திரை உலகில் பிரபலமான நடிகர் திலீப். இவர் கேரளாவை சேர்ந்த பிரபல நடிகையை 2017ம் ஆண்டு காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு தற்போது வரை நீண்டு கொண்டே சென்றிருக்கிறது. இந்த வழக்கில் நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் கைது செய்தனர். 85 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த பிறகு நடிகர் திலீப் ஜாமினில் வெளியே வந்து இருந்தார். மேலும், இந்த வழக்கு விசாரணை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணையை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டது.
இந்த நிலையில் திலீப்பின் நண்பரும், இயக்குனருமான பாலச்சந்திரகுமார் கடந்த மாதம் இறுதியில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது திலீப் குறித்து சில தகவல்களை வெளியிட்டு இருந்தார். அதில் அவர், நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இப்போது சிறையில் இருக்கும் பல்சர் சுனிக்கும் நடிகர் ஏற்கனவே நட்பு இருந்தது. நடிகர் திலீப் தன்னைக் கைது செய்த போலீஸ் அதிகாரிகளை பழிவாங்குவது பற்றிய ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
பாலச்சந்திரகுமார் அளித்த புகார்:
இந்த தகவலை நான் எங்கு வேண்டுமானாலும் சொல்லுவேன். திலீப் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் பினராய் விஜயனுக்கு நான் கடிதம் எழுதி இருந்தேன் என்று பாலசந்திரகுமார் கூறி இருக்கிறார். இதனை தொடர்ந்து நடிகர் திலீப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட நடிகையும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் நடிகர் திலீப்பை கைது செய்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசார் முடிவு செய்து இருந்தனர்.
திலீப் மீது வழக்குப்பதிவு:
இதனை தொடர்ந்து பாலசந்திரகுமார் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு கோர்ட்டில் க்ரைம் பிராஞ்ச்சில் போலீஸ் பதிவு செய்திருக்கிறது. அதில் திலீப் கைது செய்யப்பட்ட கோபத்தில் விசாரணை செய்த போலீஸ் அதிகாரிக்கு ஆபத்தை ஏற்படுத்த விழிப்புணர்வு ஆலோசனை ஈடுபட்டதாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், திருவனந்தபுரம் க்ரைம் பிராஞ்ச் போலீஸ் ஸ்டேஷனின் 6/2022 என்ற எஃப்.ஐ.ஆர் நம்பரில் திலீப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெளியான குற்றவாளிகள் லிஸ்ட்:
ஐ.பி.சி செக்ஷன் 116, 118, 120 பி, 506, 34 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி இரவு 10:30-க்கும் 12:30க்கும் இடைப்பட்ட சமயத்தில் ஆலுவா கொட்டாரக்கடவில் உள்ள திலீப்பின் வீட்டில் இந்த ஆலோசனை நடந்திருப்பது தெரிய வந்து உள்ளது. அதில் முதல் குற்றவாளியாக கோபால கிருஷ்ணன் என்ற திலீப், இரண்டாம் குற்றவாளியாக திலீப்பின் சகோதரன் அனூப், மூன்றாம் குற்றவாளியாக திலீப் மனைவியின் சகோதரன் சூரஜ், அப்பு, பாபு செங்கமனாடு உள்ளிட்ட பலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திலீப் மீது எப்ஐஆர் பதிவு :
அதுமட்டும் இல்லாமல் திலீப் நடத்திய ஆலோசனையின் ‘என்மீது கைவைத்த எஸ்.பி சுதர்சனின் கையை வெட்ட வேண்டும் என்று திலீப் கூறியதாக அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இயக்குனர் பாலச்சந்திரகுமாரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும், அவர் வெளியீட்ட ஆடியோவின் அடிப்படையிலும் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.