நடிகையின் பலாத்கார வழக்கு, அசுரன் பட நடிகையுடன் திலீப்பின் ரகசிய பேச்சு – சீல் வைத்து கொண்டு வரப்பட்ட செல் போன்.

0
629
manju
- Advertisement -

மலையாள திரை உலகில் பிரபலமான நடிகர் திலீப். இவர் கேரளாவை சேர்ந்த பிரபல நடிகையை 2017ம் ஆண்டு காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் கைதாகி இருந்தார்கள். பின் 85 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த பிறகு நடிகர் திலீப் ஜாமினில் வெளியே வந்து இருந்தார். மேலும், இந்த வழக்கு விசாரணை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணையை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டது. உடனே திலீப்பின் நண்பரும், இயக்குனருமான பாலச்சந்திரகுமார், தன்னைக் கைது செய்த போலீஸ் அதிகாரிகளை பழிவாங்குவது குறித்து திலீப் ஆவேசத்துடன் பேசியதை நீதிமன்றத்தில் கூறினார்.

-விளம்பரம்-

இதை தொடர்ந்து போலீஸ் நடிகர் திலீப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இப்படி ஒரு நிலையில் நடிகர் திலீப் தன்னுடைய முதல் மனைவி மஞ்சு வாரியருடன் சமீபகாலத்தில் பேசி வந்திருந்தது குறித்து நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ள தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடிகையின் பலாத்கார வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகளை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் முன் ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

- Advertisement -

நடிகை பலாத்கார வழக்கில் கைதான திலீப்:

மேலும், இந்த வழக்கு தொடர்பாக நடிகர் திலீப் சென்ற மாதம் மூன்று நாட்கள் கொச்சி சிஐடி போலீசாரிடம் விசாரணைக்காக ஆஜரானார். இப்படி ஒரு நிலையில் நேற்று காலை போலீஸ் தரப்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில் அவர்கள் கூறியிருப்பது, நடிகர் திலீப் தான் பயன்படுத்திய பழைய போன்களை எங்களிடம் ஒப்படைக்க வில்லை. இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த முன் ஜாமீன் மனு விசாரணை உடனடியாக நடத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். மேலும், இந்த மனுவை நீதிபதி கோபிநாத் விசாரித்திருக்கிறார்.

திலீப் மீது கண்டனம் தெரிவித்த நீதிபதி:

அப்போது அவர் மீது கடும் கண்டனம் தெரிவித்து கூறியிருப்பது, விசாரணை அதிகாரிகள் கேட்கும் அனைத்து ஆவணங்களையும் உடனடியாக திலீப் கொடுக்க வேண்டும். போனை ஒப்படைக்க மறுப்பது ஏன்? போலீசார் மீது நம்பிக்கை இல்லை என்றால் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இதனையடுத்து திலீப் தரப்பில் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடினார். அப்போது அவர், திலீப்பின் பழைய போனில் அவரது முதல் மனைவியான நடிகை மஞ்சுவாரியர் உடன் பேசிய தகவல்கள் இருக்கின்றது. அது போலீசிடம் கிடைத்தால் அவர்களின் தனிப்பட்ட விஷயங்கள் எல்லாமே வெளியே சொல்ல வேண்டிய சூழ்நிலை வரும்.

-விளம்பரம்-

திலீப் தரப்பு வழக்கறிஞர் கூறியது:

மேலும், அந்த போனில் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்கள் எல்லாம் உள்ளன. அது வெளியே சென்றாலும் திலீப்புக்கு சிக்கல்தான். எனவே இந்த போனை ஒப்படைப்பது குறித்து நாங்கள் ஆலோசித்து தான் முடிவெடுக்க முடியும் என்று வாதாடி இருந்தார். இருந்தாலும் இன்றைக்கு இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்தது. அதில் நீதிபதி அவர்கள் கூறியிருப்பது, திலீப் தனது செல்போனை ஷீல் வைக்கப்பட்ட கவரில் வைத்து நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும். பழைய செல்போனை ஒப்படைக்க கோரி குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து போனை ஒப்படைக்க குற்றப்பிரிவு போலீசார் திலீப்புக்கு கடிதம் நோட்டீஸ் அனுப்பி வைக்கிறார்கள்.

திலீப் அனுப்பிய பதில் கடிதம்:

உடனே திலீப் பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில் அவர், நடிகை பலாத்காரம் நடந்த 2017ஆம் ஆண்டு நான் பயன்படுத்திய செல்போனை என்னை கைது செய்யப்பட்ட பிறகு நீதிமன்றத்தில் ஒப்படைத்து விட்டேன். அந்த போன் தடவியல் பரிசோதனைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டது. தற்போது போலீசார் கேட்டுள்ள போன்களில் ஒன்று வேறு ஓருவரின் பெயரில் நான் வாங்கியது. சில நாட்களுக்கு முன்பு தான் அதைப் பயன்படுத்தத் தொடங்கினேன். இன்னொரு போனை வங்கி தேவைக்கு மட்டும் பயன்படுத்தி வருகிறேன். மூன்றாவது இருந்த போனை நானும் வசந்தகுமாரும் பேசி இருந்தது.

டிஎஸ்பி பைஜூ பவுலோசு – பாலசந்திரகுமார் தொடர்பு:

அதை நான் தடவியல் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டேன். நீதிமன்றம் கேட்டுக் கொண்டால் அந்த போனையும் சமர்ப்பிக்கிறேன். அதோடு இந்த வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி பைஜூ பவுலோசும், பாலசந்திரகுமாரும் பல முறை போனில் பேசி உள்ளேன். இரண்டு பேரும் சேர்ந்து தான் என்னை இந்தப் பிரச்சனையில் சதி திட்டம் தீட்டி மாற்ற வைத்துள்ளார்கள். எனவே டிஎஸ்பி செல்போனை வாங்கி பரிசோதித்தால் பல தகவல்கள் தெரியவரும் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement