சிவாஜி படத்தில் ரஜினியின் மாமனாராக நடிக்க மறுத்து காரணம் இதான் – லியோனியே சொன்ன தகவல்.

0
735
dindigulleoni
- Advertisement -

சிவாஜி படத்தில் ரஜினியின் மாமனாராக நடிக்க வாய்ப்பு வந்தும் அதில் நடிக்க மறுத்தது ஏன் என்று லியோனி பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. தமிழில் மிகச் சிறந்த பட்டிமன்ற பேச்சாளராக திகழ்பவர் திண்டுக்கல் லியோனி. இவர் ஆசிரியர், மேடைப்பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவை பட்டிமன்ற நடுவர் என பன்முகம் கொண்டு விளங்கி வருகிறார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கு 2010 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது வழங்கப்பட்டிருந்தது. இவர் திண்டுக்கல்லில் புனித மரியன்னை மேனிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார்.

-விளம்பரம்-

தற்போது இவர் பட்டிமன்றத்தில் நடுவராக இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் அரசியலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் கங்கா கௌரி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் திண்டுக்கல் லியோனி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்று கொடுத்து இருக்கிறார். அதில் அவர் தான் சினிமாவில் இருந்து நடிக்காமல் போவதற்கான காரணத்தைக் கூறி இருக்கிறார்.

- Advertisement -

கங்கா கௌரி படம் :

அதில் அவர் கூறியிருப்பது, நான் கங்கா கௌரி என்ற படத்தில் நடித்தேன். அந்த படத்தில் வடிவேலு, அருண் குமாருக்கு அப்பாவாக நடிக்கும் கதாபாத்திரம். அப்போது அந்த படத்தில் நடிக்கும்போது இயக்குனர் கொஞ்சம் சோகமாக, வேதனையாக நடிக்கச் சொன்னார். எவ்வளவு முயற்ச்சி பண்ணியும் என்னால் நடிக்க முடியவில்லை. எப்படியோ நடித்து அந்த படம் ரிலீஸானது. பின் அந்த படத்தை பார்ப்பதற்கு நானும் தியேட்டருக்கு யாருக்கும் தெரியாமல் போயிருந்தேன்.

மேக்கப்பால் பட்ட கஷ்டம் :

அங்கே எல்லோரும் படத்தை பார்த்துவிட்டு எதற்கு இந்த லியோனிக்கு தேவை இல்லாத வேலை.வாத்தியாராக இருந்து கொண்டு ஏன் இப்படி எல்லாம் நடிக்கணும். இதெல்லாம் தேவையா? இதற்கு பதில் பிச்சையெடுத்து இருக்கலாம் என்றெல்லாம் விமர்சித்திருந்தார்கள். அதோடு நான் சினிமாவில் நடிப்பதை நிறுத்தினேன். அதற்குப் பிறகு சிவாஜி படத்தில் ரஜினிக்கு மாமனாராக நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போது எனக்கு பள்ளியில் விடுமுறை கிடைக்கவில்லை.

-விளம்பரம்-

சிவாஜி பட வாய்ப்பு :

எனக்கு பதில் பட்டிமன்றம் ராஜா நடித்து இருந்தார். பின் நீண்ட வருடங்களுக்கு பிறகு நான் ஆலம்பனா படத்தில் நடித்து உள்ளேன். சமீபத்தில் இந்த படத்தின் டீசெர் வெளியாகி உள்ளது என்று கூறியிருக்கிறார். புகழ்பெற்ற அரேபியா கதையான அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை உலக மொழிகள் அனைத்திலும் சினிமாவாகிறது. அதை தழுவி தற்போது பல படங்கள் வெளியாகியிருக்கிறது. தமிழில் கூட பட்டினத்தில் பூதம் என்று அசோகன் பூதமாக நடித்திருந்தார். தற்போது இதே பாணியில் உருவாகி இருக்கும் படம் தான் ஆலம்பனா.

பல ஆண்டுகள் கழித்து நடிக்க காரணம் :

இந்த படத்தை பாரி.கே. விஜய் இயக்கியுள்ளார். கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் பூதத்தின் எஜமான் அலாவுதீனாக வைபவும், பூதமாக முனிஷ்காந்த் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பார்வதி நாயர், திண்டுக்கல் லியோனி, காளி வெங்கட், ஆனந்தராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் திரையரங்கிற்கு வெளிவர உள்ளது.

Advertisement